ஒருதலைக் காதல்
*********************************************************
1952...
வயல்கள்
பச்சை வண்ணத்தில்
நனைந்திருந்தன...!
விண்ணைத் தொட
மண்ணின் மரங்கள்
மல்லுக்கட்டி நின்றன...!!
அந்த
அழகான கிராமத்தில் நான்...
இருபது வயதைத் தொட
இன்னும்
இரண்டு வருடங்கள்
மீதியிருந்தது எனக்கு...
கனவுகளையும்
கற்பனைகளையும்
நிஜங்களாக்க
நினைக்கும் வயது...
அரும்பு மீசை...!
ஆறடி உயரம்...!!
கருப்பு வெள்ளை சினிமாவின்
கதாநாயகர்களை விட
அழகாகவே இருந்தேன் நான்...
பறவைகளின் சலசலப்பில்
மவுனத்தை தொலைத்த -ஒரு
மாலை நேரம்...
அப்போதுதான்
அவளை
முதல் முதலாய் பார்த்தேன்...!
பதினாறு வயது இருக்கும்...!
பார்ப்பதற்க்கு
அவள் அழகாகவே இருந்தாள்...!!
மஞ்சள் தேகம்...!
மவுனமாய் பேசும் கண்கள்...!!
சிவந்த உதடுகள்...!
சிரிக்கும்போது குழி விழும் கன்னங்கள்...!!
அவளைப் போல் அழகியை
அதற்கு முன் -நான்
அகிலத்தில் எங்கும் கண்டதில்லை...
முதல் பார்வையிலே
முழுதாய் -என்
மூச்சோடு கலந்தாள் அவள்...
அவள் பார்வைகளில்
அடி நெஞ்சில் எனக்கு
அனல் அடித்தது...!
அப்படியொரு உணர்வு
அதற்கு முன் எனக்கு வந்ததில்லை...!
தூக்கத்தை
தூரத்திவிட்டு
என் நினைவோடு குடியேறினாள்...
பார்வைகளிலே
பாதி வருடம் போனது...
ஆறு மாதம் கழிந்து
அன்றொரு நாள்...
அவளின் முன் நான்...
காதலை சொன்னேன்...
மவுனத்தோடு
மறுத்தாள் அவள்...
அடி நெஞ்சில் எனக்கு
இடி விழுந்தது...!
கன்னங்களோ
கண்ணீரில் நனைந்தது...!!
நினைவாய் இருந்தவள் என்னை
நிராகரிப்பதை கண்டு
நிசப்தமாகி நின்றேன்...
1953...
ஒரு வருடம் கழித்து...
அன்றுதான்
அவளுக்கு திருமணம்...
அடுத்த வீட்டு நண்பன்
அதை என்னிடம் சொன்னதும்
கட்டுப்படுத்த முடியாமல் -என்
கண்ணுக்குள் கண்ணீர் துளிகள்...
நாட்கள் வாராங்களாகி
வாரங்கள் மாதாங்களாகி
மாதங்கள் வருடங்களாகின...
இப்போதும்
மறக்க முடியவில்லை அவளை...
இதயத்தில் நினைவுகளாகி
இரவுகளில் கனவுகளானாள் அவள்...
1958...
ஐந்து வருடங்கள் கழிந்து
அவளை அன்று பார்த்தேன்...!
இடுப்பில்
இரண்டு வயது குழந்தையோடு...
அவளை பார்த்து நின்றேன் நான்...!
அவள் என்னை கண்டுகொள்ளவில்லை...!!
இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...
நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு
நரகங்களாய்
நகர்ந்து போனது...!
மனதோ அவளை
மறப்பதற்க்கு மறுத்தது...!
கடை வீதி...!
கோயில் திருவிழா...!!
இங்கெல்லாம் அவளை
எப்போதாவது பார்ப்பதுண்டு...
கண்களோடு சேர்த்து -என்
கண்ணீர் துளியும் அவளை
எட்டிப்பார்க்கும்...
அவள் என்
நினைவுகளில் வாழ்ந்ததால்,
நானோ -என்
வாழ்க்கையை வாழ மறந்துவிட்டேன்...
2008...
ஆண்டுகள்
ஐம்பதை தாண்டின...
சுருங்கிப்போன தோல்...!
மங்கிப்போன பார்வை...!!
கூனல் விழுந்த முதுகு...!
முதுமையால் முளைத்த வழுக்கை...!!
முழுதாய் முதுமையான
எழுபத்து ஐந்து வயது எனக்கு...
இப்போதும் அவளின்
அதே நினைவுகள்...
இதயத்தில் இப்போது
இன்னும் அதிகமாய் பதிந்திருந்தது...!
மூன்று மாதங்களுக்கு முன்
மூக்குக் கண்ணாடியோடு பார்த்த
அவள் முகம்...
2009...
முதுமை என்
மூச்சை நிறுத்த பார்க்கிறது...!
உயிர் போகும்
இந்த நொடி கூட
எனக்கு துணையாய்
அவள் நினைவுகள் மட்டும்...
எனக்கு தெரிகிறது...!
இன்னும் சில நொடிகளில் -என்
இதயம் துடிப்பதை நிறுத்தும்...!
கடைசியாய்
கடவுளிடம் ஒரு வேண்டுகோள்...!!
கடவுளே...
அடுத்த ஜென்மத்திலாவது
அவளோடு நான் வாழவேண்டும்...
-----அனீஷ்...
kavitail oru katai. very nice
ReplyDeletevery nice...
ReplyDelete1 side love ah azhaga sollirukeenga...
Kalakurrenga Anish...!
:) :C :)
:) Gayathri
ReplyDelete:) Kaavya
இருவருக்கும் ரொம்ப நன்றி...!! :)
good
ReplyDeleteரொம்ப நன்றி Master Ala Mohamed :)
ReplyDeleteசகோதரா! என்ன இவ்வளவு நீட்டி எழுதியுள்ளீர்கள். மிக நீட்டமானால் பாதியில் விட்டிட்டு ஓடி விடுவினம் ..என்னைப் போல. வாழ்த்துகள் மேலும் முன்னேற....
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@kovaikavi: நான் சொல்ல வந்த விடயத்தை இவ்வளவு பெருசாதான் எழுத முடியும்... :(( வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
ReplyDeletevazththukkal thaththaa,,,
ReplyDeleteaduththa jenmaththil aavavathu patti yoda neenga vazhanum thaththaa...
meendum thaththavuku vazththukkal nalla kavithai koduththatharkku...
thaththaavai nalla oru kavignaakkiya paattikkum enathu vazththukkal...
@Anonymous: ufffffffffffffffff... வருகைக்கும் வாழ்த்துகும் மிக்க நன்றி... :)
ReplyDeleteஒரு தலை ராகம் போல் ஒரு தலை காதல் super
ReplyDeleteஅந்த அழகான young boy நீங்களா ?
by
லிவினா
@Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDeletekonnutinga pongo...........best ever
ReplyDelete@mrai: ஹ்ம்ம்ம்...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
Superb....
ReplyDeleteyou are impress me....
keep it up...
Fowmy (From_Qatar)