23 Sept 2010

போதும் இந்த பொல்லாத வாழ்க்கை


முகமூடிகளை அணிந்துகொண்டு
முன்னுக்குப்பின்
முரணாகப் பேசும் மூடர்கள்...!

நம்பிக்கைகளுக்கும்
நம்பிக்கை துரோகத்திற்க்கும் இடையில்
நடைபிணமாகும் உயிர்...!

விழிகளில் நீரை வழியவிட்டு
விவாதம் செய்யும்
வீணாய்போன மனிதர்கள்...!

மனதோடு இருந்துவிட்டு - அந்த
மனதையே உடைத்து விடும்
மனித கூட்டம்...!

கனவுகளை புதைக்க சொல்லி
கல்லறைகளை உயிர்ப்பிக்கும்
சந்தர்ப்பவாதிகள்...!

ஏய் கடவுளே...
போதும் எனக்கு இந்த
வெறுத்துப் போகும்
பொல்லாத வாழ்க்கை...!

என் மூச்சை நிறுத்தி
என் இதயத்தை இறக்கவிடு
இப்போதே...

கடவுளே...!
கடைசியாய் ஒரு வேண்டுகோள்...!!
இன்னொரு ஜென்மம்
இனியும் எனக்கு தந்தால்
தயவுசெய்து நீ
மறுபடியும் என்னை
மனிதனாக மட்டும் படைத்துவிடாதே...

-----அனீஷ்...
SHARE THIS

3 comments:

  1. nee solrathu correct ellarum appadithan anish

    ReplyDelete
  2. கவிதை, கவிதையாகவே இருக்கட்டும். ஏனென்றால், மனிதப்பிறவி, ஒரு அற்புதமானது. வாழ்க்கை என்னும் கடலில் நீந்தத் தெரியாதவனுக்கு மட்மே, அற்புதமான மனிதப்பிறவி அற்பமாகத் தெரியும்.

    ReplyDelete