26 Jan 2011

ஈரம்...

 

வெண்மேகம் கொஞ்சம் கொஞ்சமாய்
கருமேகமாய்
உருமாறிக்கொண்டிருந்தது...!

அமைதியாய் வீசி நின்ற
அழகிய தென்றல் காற்று,
அப்போதுதான்
ஆக்ரோஷமானது...!

வானத்தின் ஜன்னலை
கிழித்து வந்த மின்னல் ஒளி - என்
கண்ணெதிரில்
காற்றில் பட்டு தெறித்தது...!

சத்தங்களை
சலிப்பில்லாமல்
பிரசவித்துக்கொண்டிருந்தது
பின்னால் வந்த இடி முழக்கம்...!

மழைத்துளிகள் மண்ணிலே
புள்ளி வைக்காமல்
புதியதாய் ஒரு
நீர்க்கோலம் போட தொடங்கியது...!

என் வீட்டு திண்ணையில் நான்...!

மழையையும்,
மழையின் சலசலப்பையும்
என்றுமே நான் ரசித்ததில்லை...!

அப்போது ஏனோ
அடைமழையை ரசிக்க சொன்னது...!
அடி மனது...

மழையையும்,
மழைத்துளி சத்தத்தையும்
ரசிக்க பிடிக்குமென
என்றோ ஒரு நாள் - அவள்
என் காதில் சொன்னதாய் ஞாபகம்...!

மறந்து கிடந்த
மனதிற்குள்
மறுபடியும் மரணவலி...!

துடிக்கும் இதயம்
சட்டென்று
வெடித்தது போல் ஒரு உணர்வு...!

மழையில் நின்று கொண்டு
அவள் என்னை
அழைப்பது போல் இருந்தது...!

மழையில் நனைந்தால்
மறுநாளே அவளுக்கு
காய்ச்சல் வந்துவிடுமே...!
மழையில் குதிப்பவளை
கைகளால் கட்டியணைத்து
கரையேற்ற வேண்டும் போலிருந்தது...!

முட்டாள் நான்...!
இன்னும்
நிழல்களையும், பிம்பங்களையும்
நிஜமென்று
நினைத்துக்கொண்டிருக்கிறேன்...!

சிந்தி விழுந்த மழைத்துளியும்
என்னைப் பார்த்து
சில்லென்று
சிரிப்பது போலிருந்தது...!

மழைத்துளிகளுக்கிடையில்
மறுபடியும் ஒருமுறை - அவள்
முகத்தை தேடினேன்...!

கடைசியாய் சந்தித்த அன்று
மறந்துவிட சொல்லி
அவள் எங்கோ
மறைந்து போனது -என்
மனதிற்க்குள் இப்போது கனத்தது...!

தலைசாய்த்துக்கொண்டு
அப்படியே கண்மூடினேன் நான்...!

நான் கண்விழித்து பார்க்கும் போது
மழை மொத்தமாய்
நின்றுபோயிருந்தது...!

மண்ணை தொட்ட
மழைத்துளியின் ஈரம் - என்
கண் முன்னே மெதுவாய்
காணாமல் போய்க்கொண்டிருந்தது...!

ஆனால்,
என் கண்ணீர் நனைத்த
என் கன்னங்களும்,
அவள் நினைவுகள் நனைத்த
என் மனதும்
இன்னும் ஈரமாகவே இருந்தது...!

----அனீஷ் ஜெ...
 
SHARE THIS

16 comments:

 1. கவிக்கா சூப்பர் கவிக்கா. படித்த என்னையும் கண்கலங்க வைத்துவிட்டீங்க.

  ///கடைசியா சந்தித்த அன்று மறந்துவிடச்சொல்லி அவள் மறைந்து போனது////

  இதுக்குமேல படிக்க முடியேல்லை கவிக்கா....

  ReplyDelete
 2. உள்ளம் தொடும் கவிதை அழகாய் வந்திருகிறது .....கவிதைக்கு பொய் அழகு
  .இது பொய் என்று சொல்ல மாடேன்.

  ReplyDelete
 3. @athira: மிக்க நன்றி...! மிக நீண்ட நாட்க்களுக்கு பிறகு, கண்ணீர் வர வைக்கும் அளவுக்கு ஒரு சிறந்த கவிதை எழுதியிருக்கிறேன் என நம்புகிறேன்...! பாரட்டுக்கு மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி...!

  ReplyDelete
 4. @நிலாமதி: உண்மை, பொய், வலி, மகிழ்ச்சி, சோகம், சுகம் ஆகியவை உள்ளடக்கிய எல்லா உணர்வுகளின் உருமாற்றமே கவிதை...!

  பாரட்டுக்கு மிக்க நன்றி...!

  ReplyDelete
 5. அருமையான காதல் கவிதை நண்பா
  வரிகள் ஒவ்வொன்றும் அருமை

  ReplyDelete
 6. @அ.செய்யது அலி: மிக்க நன்றி நண்பா...!!!

  ReplyDelete
 7. got tears while reading. very nice dear

  ReplyDelete
 8. @Gayathri: மிக்க நன்றி...!!!

  ReplyDelete
 9. eppodum yen enda sogam??????

  ReplyDelete
 10. @anishka nathan: சோகமும் நிறைந்ததுதானே வாழ்க்கை...! ரொம்ப நன்றி...!

  ReplyDelete
 11. Hi Anish...!
  Kavithai romba super :) ellarum kavthaiagavey ungal kavithayai comment panranga... but apdi ennala panna mudialanu konjam varuthama iruku :(
  hmmm its ok... but kalakureenga... ungaluku love failure ah....? kavithaya vaasicha aparam enaku intha doubt... konjam clear pannunga Anish :))

  ReplyDelete
 12. @Kaavya : அச்சச்சோ இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க... :T:T
  என்ன இது? எல்லாரும் இதே கேள்வியை கேக்குறீங்க? :(( உங்க சந்தேகத்தை அப்புறம் Clear பண்றேன் ;)
  வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி காவ்யா... :)

  ReplyDelete
 13. எப்படி தான் இப்படி எழுதிரிங்க FRIEND

  சிந்தித்தா ?

  இல்லை

  அனுபவித்தா ?

  -லிவினா

  ReplyDelete
 14. @LIVINA: அனுபவத்தால் வந்த சிந்தனை !! மிக்க நன்றி...!!

  ReplyDelete
 15. அருமை...வார்தைகளிலே உங்கள் கண்ணீரின் உப்புக் கரிக்கிறது

  ReplyDelete
 16. @Athisaya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete