கோடி சந்தோஷங்களை
கொடுத்தவள் நீ...!
ஆயிரம் தவிப்புகளை
தந்தவள் நீ...!!
பட்டாசாய் படபடத்த - என்
இதயத்தை
மத்தாப்பாய்
மலர வைத்தவள் நீ..!
என் சுவாசத்தில் கலந்து
என் உயிருக்குள் புகுந்து
என் குருதிக்குள் பாய்பவள் நீ...!
என் இதயமோ
ஏதேதோ கவலைகளை சுமந்த
கடந்த புத்தாண்டு...!
உன்னால்
ஏராளமான சந்தோஷங்களை
என் இதயம் சுமக்கும்
இந்த புத்தாண்டு...!
இந்த புத்தாண்டில்
பட்டாசு வெளிச்சத்தில்,
வானத்தை போலவே
என் மனசும்
மின்னிக்கொண்டிருக்கிறது...!
உன்னால்...
----அனீஷ் ஜெ...

nice
ReplyDeletesuper kavitai. happy new year aniesh
ReplyDeletenew year kaviti super !!!!!!
ReplyDelete