உன்
விழிகள் ஏற்றி வைத்த
பார்வை விளக்குகள்தான் - என்
இதயம் முழுவதும்
இடைவிடாமல் பற்றி எரிகிறது...!
உன்
முக தரிசனங்களோ,
கோடை மழையையும்
பகல் நிலவையும்
பார்த்த பரவசம் தருகிறது...!
உன்
மவுனப் புன்னைகை
உதிர்த்த சத்தமோ,
என் உயிரின் நுனியில்
எங்கோ ஓங்கி ஒலிக்கிறது...!
உன்
கன்னப் புத்தகத்தில்
கவிதை எழுத,
என் உதட்டுப் பேனா
எப்போதும் காத்துக்கிடக்கிறது...!
உன்
கைவிரல் அசைவுகளில்
காற்றும் வீணையாகி,
சத்தமில்லாமல் - ஒரு
சங்கீதத்தை தர தவமிருக்கிறது...!
உன்
துப்பட்டா மறைத்த பாகங்கள்
ஈட்டி முனையாய்,
தேடி என் இதயத்தை தாக்க,
தேகமெங்கும் காதல் காயம் படர்கிறது...!
உன்
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது...!
----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
வரிகள் அனைத்துமே அருமையா இருக்கு நண்பா
ReplyDeletesuper!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஉங்கள் கவிதைகளில் காதல் உணர்வுகள் நிரம்பி வழிகிறது
ReplyDeleteஎன்பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அவள் கொடுத்து வைத்தவ.........
ReplyDeleteதல கலக்கல் தான் ....
ReplyDeleteகாதல் நிரம்பி வழிகிறது ....
தலைப்பும் அதற்க்கு தகுந்த வரிகளும் அருமை....
last paragraph superrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteசுப்பர்ப்... கடைசி பரா மிக அருமை.
ReplyDeleteromba nalla eruku kadal
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி!!!
ReplyDeletesuper..vaalththukkal
ReplyDeleteஅனைவருக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDeleteகவிதை SUPER ........................................
ReplyDeleteகவிதையின் தலைப்போ பாழாய் போன மனசு SUPER ..............................
-LIVINA
நன்றி !!
ReplyDelete