இருட்டில் ஒரு இதயத்திருடன் !
இரவின் அடையாளமாய்
மெல்லிய நிசப்தம்...!
பெரிய வானத்தின்
நட்ச்சத்திர பொக்கிஷங்களை
தன்னந்தனியாக
காவல்காத்துக்கொண்டிருந்தது..!
நிலவு...
அவளின் இதயத்தை
திருட நினைத்து
பல நாட்களாகிவிட்டது...!
பலநாட்கள்
பகலிலும் முயற்சித்துவிட்டேன்...!
இன்று இரவுக்குள்
எப்படியாவது
திருடிவிட வேண்டும்..!!
முடிவோடு நான்...
அவளின்
வீட்டின்முன் நான்...!
அக்கம் பக்கம் பார்த்தேன்...!
அடர்ந்த இருட்டில்
யாரும் இருப்பதாய் தெரியவில்லை...!
தெரு விளக்கு மட்டும்
விட்டு விட்டு
எரிந்து கொண்டு
என்னை பார்த்துகொண்டிருந்தது...!
என் திருட்டுக்கு சாட்சியாய்...
மேல்மாடியில்
மெலிதாய் தெரிந்த இருட்டு
அவள் தூங்கிவிட்டாள் என்பதை
எனக்கு சொல்லியது...!
மதில் சுவரில் குதித்து,
வீட்டு சுவரை மிதித்து
மேல் மாடியை அடையவே
பெரும்பாடாகிவிட்டது எனக்கு...
ஜன்னல் கதவுகளை
உடைக்கும் சத்தம்
இமைகளை அடைத்த
அவளின்
அயர்ந்த தூக்கத்தை
கலைக்கவில்லை...!
இப்போது
அவளின் அறைக்குள் நான்...!
தூங்கும் போது
அவள் இன்னும் கொஞ்சம்
அழகாய் தெரிந்தாள்...!
அவள் உதடுகள் பேசும்
புன்னகையோ,
தூக்கத்திலும்
அவள் முகம் முழுவதும்
பரவிக்கிடந்தது...!
இதயத்தை
திருடுவதுதான் எப்படி?
புதிய திருடன் - என்
புத்திக்கு இன்னும்
புரியவில்லை...!
அந்த மெல்லிய இருட்டில்
எதிரில் படுத்திருந்த
அவளை தவிர
எதுவும் எனக்கு தெரியவில்லை..!
மெதுவாய்
அவள் அருகில் சென்றேன்...!
என் கைப்பட்டு
ஏதோ கண்ணாடிபொருள்
கீழே விழுந்து
உடைந்து சிதறியது...!
படபடவென
விழித்துக்கொண்டாள் அவள்..!
இருட்டில் மெதுவாய்
பதுங்கிக்கொண்டேன் நான்...!
அவளின் அறைக்கு வெளியே
அனைத்து விளக்குகளும்
எரியத்தொடங்கியது தெரிந்தது...!
நான் பயந்தது போலவே
வீட்டில் அனைவருக்கும்
சத்தம் கேட்டிருக்கலாம்....!
அவளின் அறைக்கதவு
தட்டும் சத்தம்,
படபடவென கேட்டது...!
கூடவே
அவளின் பெயரை சொல்லி
அவள் அம்மா
அழைக்கும் சத்தமும்...
முதல் திருட்டிலேயே
மாட்டிக்கொள்ள போகிறேனா,
பயத்தால் வியர்த்துகொட்டியது எனக்கு...!
அவள் கதவைத்திறக்க தயாரானாள்...!
அவள் வாசல் கதவை
திறப்பதற்கு முன் - நான்
ஜன்னல் கதவை திறந்து
வெளியேறிவிட வேண்டும்..!
தட்டுதல் பலமாகவே - நான்
மெதுவாய் திறந்தேன்...!
என் இமைகளை...!
மணி எட்டாகுது..!
காலேஜ் போகலையா?
இன்னும் என்ன தூக்கம்?
என கேட்டுக்கொண்டு,
என் எதிரில
கையில் கரண்டியோடு
நின்றுகொண்டிருந்தாள்...!
என் அம்மா...
----அனீஷ் ஜெ...
ஹா...ஹா..ஹா.. வித்தியாசமான கற்பனை... நகைச்சுவையாக இருக்கு. சூப்பர். அடுத்தமுறை எப்படியாவது திருடிடுங்க.. இதயத்தை:))
ReplyDeleteநல்லவேளை அம்மா நின்றது கறண்டியோட, ஐஸ் தண்ணியோட இல்லை:)).
இடையில ஒரு சிறு திருத்தம்..
மெதுவாய்
அவள் அருகில் சென்றான்.... எழுத்துப்பிழை...சென்றேன் என திருத்திடுங்க.
ஹ்ம்ம்ம் மிக்க நன்றி !
ReplyDeleteஹாஹா.... அம்மா சமையல் பண்ணிட்டு இருக்கும்போதே வந்ததால கரண்டி.. இல்லாட்டி ஐஸ் தண்ணிதான்.. :)
எழுத்துப்பிழையை திருத்திவிட்டேன் !!
:)
ReplyDeleteஹி ஹி சஸ்பென்ஸ் கவிதை ரசிக்கும்படியா இருக்கிறது
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி !!
ReplyDeleteAnish unga kavithaiyala sirikavum vaikireenga, azhavum vaikireenga... really great...
ReplyDeleteInnoru spelling mistake irukku... Kannaadi ku pathila kannadi nu iruku... Antha ponna than kanavula correct panna mudiala, intha spelling mistake ah konjam correct pannidunga :) :)) :)
Kalakureenga...!
:X :C :X
@Kaavya : spelling mistake கரெக்ட்டா கண்டுபிடிச்சு, எங்கே இருக்குனு சொன்னதுக்குக்கும், உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDelete