நிலா மறைந்தது...!
கூடவே அந்த முகமும்...
தூக்கம் தொலைந்து,
கனவும் கலைந்தது...!
அதனுடன் கலைந்து தொலைந்தது...!!
நெஞ்சுக்குள் மிச்சமிருந்த
சில நினைவுகள்...
பறவைகளின் சிறகசைவு,
சிட்டுக்குருவியின் சிணுங்கல் என
மவுனம் கலைத்தது வான்வெளி...!
அப்படியே என் இதயமும்...
புல்வெளிகளை நனைத்தது
அதிகாலை பனித்துளி...!
எனக்குள் நனைந்து கரைந்தது,
என்றோ முளைத்த காதல்...
தெளிவானது வானம்...!
கூடவே என் மனதும்...
இருட்டை தொலைத்த
இனிமையான விடியல்கள்
இனி தொடரும்...
பூமிக்கும்...
புதியவனாகிவிட்ட எனக்கும்...
----அனீஷ் ஜெ...
kavithai aarumai boss...
ReplyDeletekalakal...
ennoda ration card lam kekkuringoooo...ration cardla name irunthaa thaan ungalukku comments kodukka mudiumaa boss...
@Anonymous: அங்கே கேட்டதுக்கு இங்கே பதில் சொல்றீங்க..?
ReplyDeleteஹ்ம்ம்ம் ரேசன் கார்டுல பெயர் இருந்தா இல்ல, உங்களுக்கு பெயர் இருந்தாலே தாராளமா கமெண்ட் போடலாம்.. ;)
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
congrats for new starting
ReplyDelete@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...
ReplyDelete