10 Jan 2012

கசங்கிய இதயம் !


உறக்கத்தை கெடுத்த
உன் முகமும் - என்
உயிருக்குள் கேட்ட
உன் குரலும்.
இப்பொழுதெல்லாம் எனக்கு
நினைவுக்கு வருவதில்லை...!

உன்னை நினைத்து
கவிதை எழுதிய
என் பேனாவும்,
உன்னை நினைப்பதிலே
நான் செலவிட்ட
என் நேரங்களும்,
மரணித்துப்போய்
மாதங்கள் பலவாகிவிட்டன...!

உன்னை முழுவதும் - நான்
மறந்துவிட்டதாய் சொல்லி
என் உதடுகள்
பேசிக்கொள்கிறது...!

ஆனாலும்...
எங்கேயாவது
உன் பெயர் கேட்டால்
ஒரு நொடி நின்று துடிக்கும்
என் இதயமும்,
நீ பிரிந்து சென்றதாய்
சிறு கனவு வந்தாலும்
பாதி தூக்கத்தில் - நான்
பதறியடித்து எழுந்தபின்
எனக்கே தெரியாமல்
என் இமை விளிம்புகளில்
ஒட்டியிருக்கும்
ஒருதுளி கண்ணீரும்,
மறக்காமல் சொல்லிவிடுகின்றன...!

என் கசங்கிய இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்ந்துகொண்டிருக்கும்,
உனக்காகத்தான்
நான் இன்னும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

21 comments:

 1. கவிதை சூப்பர்... ஆனா இது சரியென ஆதரிச்சா. அது உங்களுக்கு நல்லதில்ல... அதனால... மறந்திடோணும்... அனைத்தையும் மறந்திடோணும்....

  “இதுவும் கடந்து போகும்”.

  ReplyDelete
 2. ஊசிக்குறிப்பு:
  என்னிடம் கொஞ்சம் ஞாபக மறது குளிசை(ரப்லெட்) இருக்கு தரட்டே?:R:R:R:R.

  ReplyDelete
 3. காதல் வலி சொல்லிப் போகும் அருமையான பதிவு
  வடுவுடன் கூடிய வலியாய்த் தொடரும்
  காதலின் இழப்பை அருமையாகச் சொல்லிப் போகும்
  அழகான பதிவு மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இழந்த காதலை வடுவாயிப் போயினும்
  வலி தரும் அவஸ்தயைச் சொல்லிப் போகும் பதிவு
  அருமையிலும் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கவிதை super

  But

  அதை மறந்து விடுங்க friend

  by
  லிவினா

  ReplyDelete
 6. haiyoo haiyooo kasangipona papperum kasangi pona idayamum enga poi serumunnu yaarukkum theriyathu....


  kavithai s very gooddddddd

  ReplyDelete
 7. புத்தாண்டு வாழ்த்துகள்...Nice Bro...

  ReplyDelete
 8. @athira: "அதுவும் கடந்து போயிடிச்சு" :) இது சும்மா “கற்பனை கவிதை”

  ஞாபக மறதி குளிசை எடுத்துகிட்டா எனக்கு கவிதை எழுதுறதே மறந்திடும். அதனால என் கவிதைல இருந்து தப்பிச்சிடலாம் நினைச்சீங்களா..? முடியவே முடியாது...! விட மாட்டேன்... =))

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 9. @Ramani: வாங்க ஐயா...!

  உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 10. @siva sankar: வாங்க பாஸ்...! “முதல்” வருகைக்கு மிக்க நன்றி...!

  ReplyDelete
 11. @livina: எதை மறக்கணும்? இப்படி கவிதை எழுதுறதையா..? :U

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 12. @கலை: கலை எதோ தத்துவம் எழுதிருக்காங்கனு நினைச்சு படிச்சா, இப்படி மொக்கையா எழுதிருக்கீங்க... ஹையோ ஹையோ :R:R சும்மா தமாசு.. :D

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 13. @ரெவெரி: வாங்க நண்பரே...!

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

  ReplyDelete
 14. nice..... but solution um yeludha try pannunga...... that will be more useful for most of the people.. appa amma solli kekadhavanga anish solliyavadhu kekatum.

  ReplyDelete
 15. varthaigal illai solla pugala. manasa thottu solren super anish.. pokisama manathil pathiyam podukirathu varigal.. amazing.. super super super super super :) :) :) :)

  ReplyDelete
 16. ஐயோ ! உங்கள் கவிதை super நான் மறக்க சொன்னது

  அந்த பெண்ணை தான் ..

  advance haapy pongal இந்த வாழ்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும்

  by -- லிவினா

  ReplyDelete
 17. @shamilipal: அப்பா அம்மா சொல்லியே கேக்காதவங்க, அனீஷ் சொல்லியா கேக்க போறாங்க...! :A

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 18. @kilora: நல்லவேளை புகழ வார்த்தை இல்லை சொல்லிட்டீங்க...! ஏன்னா எனக்கு புகழ்ச்சி எல்லாம் பிடிக்காதுங்க...! :R:R

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 19. @livina: சரி free-ah விடுங்க...

  பொங்கல் நல்வாழ்த்துகள் !!

  நன்றி !!!

  ReplyDelete
 20. அருமையான வரிகள்....மனதில் உள்ளது

  ReplyDelete