7 Jan 2012

மெளனம் (என் முதல் “காதல்” கவிதை)


இறுகிக்கிடந்த - என்
இதயத்தை
இதழ்களின் புன்னகையால்
ஈரமாக்கியவளே...

சுற்ற வைக்கும் - உன்
புருவ நெருப்பில்
என்னை நீ
பற்ற வைத்தாய்...!

என் கற்பனை கருவறையில்
கவிதைக்கரு வளர்த்தாய்...!

என் இதயக்கருவூலத்தில்
சேமித்து வைக்கிறேன்...!
உன் புன்னகையை...

மனதை பறித்துவிட்டு
மெளனத்தை மட்டும்
எனக்கு பரிசளிக்கிறாய்...!

உனக்குள் நானும்,
எனக்குள் நீயும் இருக்க
நமக்குள் ஏன் இந்த விளையாட்டு...?

என்னைக் கொல்லும்
உன் மெளனங்களுக்கு
இனியாவது விடைகொடு...!

அழியாத காதலுக்கு - நாம்
அடுத்த அத்தியாயம் எழுதுவோம்...!

----அனீஷ் ஜெ...

SHARE THIS

14 comments:

  1. //உனக்குள் நானும்,
    எனக்குள் நீயும் இருக்க
    நமக்குள் ஏன் இந்த விளையாட்டு...?//

    சபாஷ் :-))

    ReplyDelete
  2. @ஜெய்லானி: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்பப நன்றி பாஸ்...!

    ReplyDelete
  3. @anishka nathan: வந்தமைக்கும், ஸ்மைல் பண்ணியமைக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  4. muthal kavithaiyaaa .....superbbb.....
    nalla than eluthirukkinga stratingla ye

    ReplyDelete
  5. @கலை: ஹ்ம்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. முதல்ல என் சந்தேகத்தைத் தீர்க்கோணும்... வருசம் முழுக்க காதல் கவிதைதான் எழுதுறீங்க... பிறகு என்ன “என் முதல் காதல் கவிதை” எனத் தலைப்பு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:A:A:A:A.

    ReplyDelete
  7. கவிதை கலக்கலாகத்தான் இருக்கு...

    ஆனாலும்..
    ///அழியாத காதலுக்கு நாம்
    அடுத்த அத்தியாயம் எழுதுவோம்////
    :A:A:A:A:A:A:A:A:A

    ReplyDelete
  8. super friend கலக்குங்க

    very nice

    அனைவருக்கும் என்னுடைய முதன்மை பொங்கல் நல்வாழ்துக்கள் friend

    by
    லிவினா

    ReplyDelete
  9. @athira: முதல்ல உங்க சந்தேகத்துக்கு வருவோம்...! வருசம் முழுக்க காதல் கவிதை எழுதினாலும், நான் எழுதிய “முதல்” காதல் கவிதை இதுதான்....! ஸ்கூல் படிக்கும்போது...
    இந்த கவிதை எவ்வளவு நாள்தான் பழைய பேப்பரிலேயே இருக்கும், பிளொக்கில் போடலாமேனு நினைச்சு போட்டுட்டேன்....! :)

    நீங்க தலையை முட்டிக்குற இந்த கவிதைக்கு “அப்போ” நிறையபேர் கைதட்டினதா ஞாபகம்... :X:X

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. @livina: உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்...!!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. unga kavitha adikama kadhal pathiae irukae athuku karanam ena

    ReplyDelete
  12. @saran: காதல் இல்லாமல் கவிதை இல்லை...! அதான் காரணம்...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..! :)

    ReplyDelete
  13. AwesOme Thala ;))

    ReplyDelete