22 Jan 2012

ஓர் இரவு !


நிலவைப்போல்
நீ தனித்திருக்க,
இரவைப்போல்
விடியும்வரை
உன்னருகில் நான்...

அசைந்தாடும் - உன்
விழிகளில்
விழுந்து எழுகின்றது
என் மோகங்கள்...!

வளைந்தாடும் - உன்
இடையோடு
விளையாடும் - என்
விரல்கள் பத்து...!

தொட்டவுடன் நீ
பிரசவிக்கிறாய்
வெட்கங்களை...

கட்டியணைத்து - நான்
வள்ளலாகிறேன்
முத்தங்களால்...

எரிமலை வெப்பமாய்
உள்ளுக்குள் குமுற
விடுதலை வேண்டி
தவம் கிடக்கின்றன...!
பனிமலை பிரதேசங்கள்...

தொட்டவுடன் சிணுங்கும்,
அர்த்தமில்லாமல் முணுங்கும்
மலர் என் கைகளில்...

பெய்து தீராத
அடைமழையில்,
நனைந்து விரிகின்ற
குடையாகிறாய் நீ...!!

உணர்வுகள் கட்டிக்கொள்ள
இரவு தொடர்கிறது...!

இரவு முடிந்து
பகல் பிறந்ததும்,
எனக்குள் பிறந்தது
ஒரு கவிதை...!
“ஓர் இரவு”

----அனீஷ் ஜெ...
SHARE THIS

30 comments:

 1. அடடா என்னா ஒரு கற்பனை....

  அருமை... நான் “அந்த ஓர் இரவைச்” சொன்னேன்..:R:R:R:R

  ReplyDelete
 2. @athira: அருமையா????? :Q:Q எனக்கு தெரியாதுங்க.. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ;) :R:R

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 3. ]அருமையானபடைப்பு
  "அத்தான் என் அத்தான் "என
  முதல் சுகம் கண்ட பெண்ணின் மன நிலையை
  மிக நேர்த்தியாக கவியரசர் பாடிப்போவார்
  அதேபோல் சுகங்க்ண்ட இளைஞனின்
  மன நிலயை விவரித்துப் போகும் கவிதை அதி அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. என்னாது கவிக்கா “அத்தான்” ஆகிட்டாரோ?=))) ஹையோ முடியல்ல மீ எஸ்ஸ்ஸ்ஸ்:A:A:A

  ReplyDelete
 5. வணக்கம் தல ..
  கவிதையின் கரு நெஞ்சை சிலிர்க்க வைக்கின்றது ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @Ramani: அய்யய்யோ நான் பட்டும் படாமல் எழுதிருக்கேன்.. நீங்க அதை இப்படி பப்ளிக்கில் போட்டு ஒடைச்சிட்டீங்களே...
  ;);) விடயம் புரியாம படிச்சிட்டு போறவங்க எல்லாரும், இனிமே என்னை அடிக்குறதுக்காக துரத்துவாங்களே... :(
  சும்மா தமாசு... :D
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.. :)

  ReplyDelete
 7. @athira: ஹை... உங்களுக்கு விடயமே தெரியாதா? அது ஒரு பெரிய கதை.... :R:R:R:R:R

  நன்றி... :)

  ReplyDelete
 8. @அரசன்: வாங்க தல... கவிதை“கரு” பற்றியெல்லாம் சொல்றீங்க...! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தல...! :)

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல.. :)

  ReplyDelete
 9. ippo ennaththaan solla vaaringa ,,,,puriyuthu aana puriyatha maari eluthi irukkinga...

  sumaar thaan kavithai...

  ReplyDelete
 10. கவிதை super
  அந்த ஓர் இரவும் super
  தொட்டால் சிணுங்கும் மலர் தொட்டால் சிணுங்கி தானே ?

  லிவினா

  ReplyDelete
 11. anish last la ennathan sollavaringa.. puriyuthu.. puriyuthu ana puriyala..unarvugalai alutthamaga analum unarchiyaga sonna arumaiyana padaipu.. sethukiya varigal.. nice lines.. :K :K :K :K :K

  ReplyDelete
 12. //பெய்து தீராத அடைமழையில்
  நனைந்து விரிகின்ற
  குடையாகின்றாய் நீ...//

  அருமையான கற்பனை வளம்.வாழ்த்துக்கள் சகோதரா.

  ReplyDelete
 13. @கலை: புரியலையா? அப்பாடா தப்பிச்சேன் ;)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 14. @livina: ஆமாங்க.. இதில் என்ன சந்தேகம்...?

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 15. @kilora: உங்களுக்கும் புரியலையா..? ஓடுங்க ஓடுங்க... ஓடிபோய் சுட்டி டிவி பாருங்க.. :=))

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 16. @சித்தாரா மகேஷ்: வாங்க...

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 17. ena anish... anubavichu yezhudhuna mari iruku..?
  sollave illa........
  anyways dats a gud one:)

  ReplyDelete
 18. @shamilipal: அச்சச்சோ சின்ன பையன்கிட்ட கேக்குற கேள்வியாங்க இது..? :((

  அதென்ன ”சொல்லவே இல்ல”..?
  “நானும் ரவுடி நானும் ரவுடி” அப்படிங்குற மாதிரி இதையும் ஊர் முழுக்க சத்தம்போட்டு சொல்லுவாங்களோ...??? :Y:Y ;)

  ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...! :)

  ReplyDelete
 19. கலக்குறீங்க பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 20. போங்க சார்!
  உங்க இரவை சொல்லி-
  எங்க இரவை ஏங்க வசிடீங்க!

  நல்ல கவிதை!

  ReplyDelete
 21. கட்டியணைத்து வள்ளலாகிறேன்..., முத்தங்களால்
  >>>
  எட்டாவது வள்ளல் அனிஸ்.ஜெ வாழ்க வாழ்க.

  ReplyDelete
 22. உஸ்.... ஒன்னுமில்ல பெரு மூச்சு அவ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 23. தோழி யுவராணி தமிழரசன் அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!

  ReplyDelete
 24. @தமிழ்தோட்டம்: வாங்க...

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 25. @Seeni: ஃபீரீயா விடுங்க நண்பா...! நான் கூட ஏக்கத்தைதான் எழுதிருக்கேன்... :R:R

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 26. @ராஜி: எனது பெருமையை இந்த உலகுக்கே உரக்க சொல்லும் ராஜி வாழ்க..! ;)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 27. @வாங்க பார்த்து செல்லுங்க: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 28. @ஜெய்லானி: ஐயோ ஐயோ... =)) =))

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... :)

  ReplyDelete
 29. @கலை: ஹை கலை...! விருது கொடுக்குற அளவுக்கு வளந்திட்டீங்க.. கலக்குறீங்க போங்க...! எப்படியோ முதன் முதலா எனக்கு ஒரு விருது கிடைச்சிருக்கு :)

  விருதை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...!

  ReplyDelete