இமை திறந்து இழுத்தாய்...!
எனை மறந்து விழுந்தேன்...!!
விசையா இது தெரியவில்லை...!
விளைவும் எனக்கு புரியவில்லை...!!
விதி எதுவென்று கண்டு சொல்ல
நியூட்டனும் இங்கில்லை...!!!
ஈரிதழ் விரித்து சிரித்தாய்...!
ஈர அமிலமாய் உயிரை எரித்தாய்...!!
உனக்குள் நான் கரைகின்றேன்...!
உன் முன்னாலே உறைகின்றேன்...!!
திடப்பொருள் நான்
திரவமாய் திரிகின்றேன்...!!!
இரவிலும் கனவாய் தெரிந்தாய்...!
இருட்டிலும் நிறமாய் நெளிந்தாய்...!!
நிலவென்கிறேன்...!
நீல வானென்கிறேன் உன்னை...!!
உன்னை சுற்றும்
ஒற்றை கோள் நானாகிறேன்...!!!
என் காதோரம் சிணுங்கினாய்...!
உன் உதட்டோரம் முணுங்கினாய்...!!
உன்னை நான் அணைத்தேன்...!
உடல் தொட்டு எரிந்தேன்...!!
அணைத்தாலும் அணையாத
உன் சூட்டில் புதைந்தேன்...!!!
உன்னை தினமும் படித்தேன்...!
உனக்காய் கவிதை வடித்தேன்...!!
காகிதத்தில் வார்த்தையாகிறாய்...!
கவிதைக்குள் சுவாசமாகிறாய்...!!
என் கற்பனையை கத்தி முனையில்
உனக்காய் கைது செய்கிறாய்...!!!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
kaathal kaathal......
ReplyDeleteஆஹா... அருமை... ரசித்தேன்...
ReplyDeleteenna kavithai kavinjare.. nice.. yar athu nu than theriyavilai. solla mattinu ippadi adam pidika kudathu kavi..:Y :Y :Y :Y
ReplyDelete"En karpanayai kathi munayil unakkaai kaidhu seigiraai" azhagana vaarthaigal anish... Rasithen...!!!
ReplyDelete