இளமையின் நினைவுகள்
இவர்களால்தான் இன்னும்
இதயத்திற்குள் மிச்சமிருக்கிறது...!
ஆங்கில தேர்வில் முட்டையும்,
ஆசிரியரின் திட்டும்
என்றுமே எங்களை
கவலை கொள்ள செய்ததில்லை...!
முதன்முதலில் குடித்த
திருட்டு பீடியும்,
கடைசியாய் அடித்த
காலாண்டு தேர்வு பிட்டும்
இன்னும் என் நினைவுகளில்...
பட்டன் கிழிந்த சட்டையையும்,
பழைய சோற்றையும் கூட
பரிமாறிக்கொண்டோம்...!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து,
வகுப்பு புகைப்படத்திற்கு
முகம் காட்டி விட்டு,
பள்ளிக்கூடத்தை
பிரிந்து சென்றபோதும் - நம்
நட்பு பிரிந்துவிடுமோ என
சிந்திக்கவில்லை நாம்...!
வாழ்க்கை கடல் ந்ம்மை
வேறு வேறு கரைகளில்
ஒதுக்கி விட்டது...!
ஆண்டுகள் பலவாகிவிட்டது...!
புகைப்படத்தில் ஒட்டியிருக்கும் - உங்கள்
புன்னைகை முகம் காணும்போதெல்லாம்,
என் மனது எங்கேயோ தேடுகிறது...!
மாறிப்போய்விட்ட - உங்கள்
புதிய முகங்களையும்...
புதிய முகவரிகளையும்...
----அனீஷ் ஜெ...
unmaithaan sako....!!
ReplyDeleteநினைவுகள் தாலாட்டும் அருமையான கவிதை...
ReplyDeleteநானும் நட்பைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்...