பால் வண்ணமோ,
பசும்பொன்னின் நிறமோ
துளிகூட இல்லை
அவளிடத்தில்...!
சந்திரனின் ஒளியோ,
சூரியனின் விழியோ
இல்லை அவள் முகத்தில்...!
கட்டி இழுக்கும் காந்தமோ,
சுண்டி இழுக்கும் பார்வையோ
சிறிதும் இல்லை அவள் கண்களில்...!
மொட்டு விரிந்ததுபோல்
சட்டென வீழ்த்தும்
இதழ்களும் இல்லை...!
பஞ்சு கன்னங்களோ,
கொஞ்சும் குரலும்
கொஞ்சம் கூட
இல்லவே இல்லை அவளிடம்...!
சல்லடையில்
சலித்தெடுத்ததுபோல
மெல்லிடையுமில்லை அவளுக்கு...!
ஆனாலும் மனமோ
அவள் மட்டுமே
வேண்டும் என்கிறது...!
ஏனென்றால்,
அவள் என் தேவதை...
----அனீஷ் ஜெ...
ஆஹா கவிக்கா நலம்தானே?.. கவிதை அழகுதான்.. ஆனா இது தமனாவுக்கான கவிதை இல்லையே?:) : :R :R :R :R
ReplyDeleteஅவள் என் தேவதை .... அழகு...
ReplyDelete