14 Jul 2016

அதே பொய் !


நாம் இன்று
மீண்டும் ஒருமுறை 
சந்தித்துக்கொண்டோம்...!

தூரத்தில் உனை பார்த்ததும்
விலகி நடந்த என்னை
கையசைத்து அருகில் அழைத்தாய்...!

பக்கத்தில் நின்றிருந்த உன் கணவரிடம்
பலகாலம் பழகிய நண்பனென்றே என்னை
பரிட்சயப்படுத்தினாய் நீ...!

உன்னில் மாற்றமேதுமில்லை...!
அதே பேச்சு...!
அதே கேள்விகள்...!

கடந்தமுறை சந்தித்தபோது 
நீ கேட்ட அதே கேள்விதான் 
இன்றும் கேட்டாய்...!

நலமாய் இருக்கிறாயா...?

நானும் கடந்தமுறை சொன்ன
அதே பொய்யைத்தான் சொல்கிறேன்...!

நான் நலம்...!

----அனீஷ் ஜெ...

SHARE THIS

5 comments:

  1. பிரபாJuly 21, 2016 2:26 pm

    அருமை

    ReplyDelete
  2. கவிதாசன்July 25, 2016 3:22 pm

    உணர்வுகளை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete