ஒரே சாலையில்
எதிரெதிர் திசையில்
கண்டுகொள்ளாமல்
கடந்து செல்கிறோம்....!
படமொன்றை திரையரங்கின்
இருவேறு வரிசைகளிலமர்ந்து
நாம் ரசிக்கிறோம்...!
ஒரே பேருந்தின்
இரு முனைகளிலுமாய் இருவரும்
பயணமொன்று செல்கிறோம்...!
உன்ன்னை உற்றுநோக்கி நிற்கும் என்னை
யாரென்று தெரியாத அலட்சியத்துடன்
கடந்துவிடாதே...!
ஒரு புன்னகை கொடு...!
ஒருவேளை
உன் துணையென்று
கடவுள் எழுதி வைத்திருப்பது
என் பெயராக கூட இருக்கலாம்...!
----அனீஷ் ஜெ...
Inum yenaku pain ahhhh venum lovula
ReplyDeleteSure
ReplyDeleteHappy
ReplyDeleteUnmaithan
ReplyDeleteஉண்மையான காதலுக்கு சமர்பனம்
ReplyDeleteunmaithan
ReplyDeleteதொலைநோக்கு பார்வை கொண்ட மணக்கவிதை..மிக நன்று.
ReplyDeleteSuper perfect
ReplyDelete