25 Jan 2017

எதிர்காலம் !


ஜோசியக்காரனால்
ராசி நட்சத்திரம் சேர்த்து,
கட்டம் போட்டு பார்த்தும்
கணிக்க முடியவில்லை...!

இருகைகளையும் விரித்து
இதய ரேகை தொடங்கி,
இறுதி ரேகை வரை
கூர்ந்து ஆராய்ந்தும்
கூற முடியவில்லை...!

பிறந்த தேதியும்,
பின்பிட்ட பெயரும்
கழித்து கூட்டி
கணக்கு செய்தும்
கண்டுபிடிக்க இயவில்லை...!

இத்தனை செய்தும்
தெரிந்துகொள்ள முடியாத
என் எதிர்காலம்,
இப்போதென் கண்முன்னே
விரிகிறது...!
நான் உன்னை
பார்க்கும் பொழுது...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

14 comments:

  1. ஹா ஹா ஹா கலக்கிட்டீங்க போங்கோ... இப்போ கண்முன்னே எல்லாம் விரியும்.. போகப் போகத் தெரியும்... பூவின் வாசம் புரியும் ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

    ReplyDelete
  2. Vry nyz....kaalam mattume kadanthu poguthu kadhalil...!

    ReplyDelete
  3. Superb...!

    ReplyDelete
  4. தாயின் கருவறையில் தொடங்கி காதலியால் கல்லறையில் முடிகிறது பல ஆண்களின் வாழ்க்கை....

    ReplyDelete