30 Jan 2017

கலவர பூமி !


வரைமுறை இல்லா
வன்முறை தொடங்குகிறது...!

அமிலங்களை
அள்ளி வீசியே
சிறு துளியொன்று
சிதறி வழிகிறது...!

கண்ணாடியெல்லாம்
கல்லெறிபட்டு
பல துகள்களாய்
பாதையில் உடைகிறது...!

எரிகின்ற தீயில்
எறிகின்ற நீரும்
ஆவியாகாமல்
அக்னியாய் படர்கிறது...!

துப்பாக்கிகளெல்லாம்
துப்பும் குண்டுகளில்
கனத்த புகையும்
கடும் சத்தமும் தெறிக்கிறது...!

என் மனம்
எப்போதும்போல் இப்படி
கலவர பூமியாகிறது...!
என் தெருவில்
நீ நடந்து செல்லும்போது...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

8 comments:

  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னமோ ஏதோ எனப் பதறிப் பதறிப் படிச்சிட்டே வந்தால் கடசியில் கவிட்டுப்போட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  2. Sema super wow excellent amazing

    ReplyDelete
  3. Superrrr... lovable lines....

    ReplyDelete
  4. மிக அருமையான வரிகள்...Namaku pidicha ponnu kitta love solla mudiyatha podhu avanga namaku munnale nadanthu ponale manasula kalavaram thaan

    ReplyDelete