வெயிலுக்கும் நீ
குடைபிடித்தே நடக்கிறாய்...!
இல்லையென்றால்
வெளியில் நீ வரும்போதெல்லாம்
உன் முகம் கண்டே
உருகி சூரியன் மழையாகியிருக்கும்...!!
வெட்டவெளியில் விழும்
வெயில் நேர உன் நிழலில்தான்,
சூரியன் சிலசமயம் வந்தமர்ந்து
சூட்டை தணித்துச்செல்கிறது...!
வெயிலில் நீ நடக்கையில் - உன்
நெற்றியில் உருண்டு
வெறும் பூமியில் விழுகிறது
வியர்வை துளியொன்று...!
பெருமழை பெய்ததைப்போல்
குதூகலிக்கிறது பூமி...!!
வெயிலில் கொடுஞ்சூட்டை - நீ
விசிறியால் வீசி தணிக்கிறாய்...!
உருவாகும் காற்றோ
உன் தேகம் தொடும்போதெல்லாம்
சூடாகிப்போகிறது...!
உச்சி வெயில் சூரியனை
உன் வெறும் கண்களால்
அன்றொருநாள் பார்த்தாய்...!
தாங்கமுடியாதா ஒளியால்
தன் விழி மூடிக்கொண்டது...!!
சூரியன்...
----அனீஷ் ஜெ...
அருமை.
ReplyDeleteஹா ஹா ஹா அப்போ இப்போ சூரியனின் கதை குளோஸ் ஆ?:)
ReplyDeleteவெயில் குறித்து அருமையான
ReplyDeleteகுளிர்ச்சியான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Azhagana varthaigalai korthu azhagana kavithai oruvakiyuilleer... awsome lines... sama... Kavithai varnipu romba azhaga iruku.
ReplyDeleteNice
ReplyDeleteWowwww
ReplyDeleteSemma
ReplyDelete