31 Aug 2017

தனிமைகளின் நண்பன் !


கண்ணாடி பார்த்தே
புன்னகைக்க பழகு...!

உன் விரல் நுனிகளை
நீயே முத்தமிடு...!

உன் தோள்களில் சாய்ந்துகொள்ள
உன் முகத்திற்க்கு கற்றுக்கொடு...!

கைகளிரண்டால் உன்
கன்னம் தடவு...!

உன் தேகத்தை
நீயே கட்டியணை...!

ஆறுதல் தேடினால்
அவமானங்களே மிஞ்சும்...!
உன் தனிமைகளின்
உண்மையான நண்பன்
நீ மட்டுமே...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

5 comments:

  1. Really superb anna.. Kalakitinga

    ReplyDelete
  2. கவிக்கா நலமோ? இப்போதுதான் நீங்க காதல் மயக்கத்திலிருந்து வெளியே வந்து மிக அருமையான கவிதை தந்திருக்கிறீங்க.. ஹா ஹா ஹா உண்மைதான்.. நாம்தான் நம்மை தேற்ற வேணும்.. அடுத்தவர்களிடம் ஆறுதலை எதிர்பார்ப்பது டப்பூஊஊஊஊ:).

    ReplyDelete
  3. truely said super

    ReplyDelete