9 Dec 2011

அவனும்... அவளும்...


ஒல்லியான தேகம்...!
மெல்லிய இடை...!!
நிலா முகம்...!
புன்னகைக்குள்ளே
மறைந்துகிடக்கும்
உதடுகள்...!!
அவள் அழகாகவே இருந்தாள்...

முழுமையான உயரம்...!
முகமெல்லாம் குறுந்தாடி...!!
கலவரம் கலக்காத
பார்வைகள்...!
அவனும் அவளுக்கு
பொருத்தமாகவே இருந்தான்...!!

அவளுக்காக அவன்
காத்திருக்கிறான்...!
அவள் பெயரையே
கவிதை என்கிறான்...!!
அவன் அவளை
காதலிப்பதென்னவோ
உண்மைதான்...

அவள் அவனை
கண்டுகொள்ளாமல் சென்றாலும்,
காலை முதல் மாலை வரை
பின்தொடர்கிறான்...!

அன்று...
நகரப்பேருந்தில்
நகர முடியாத நெருக்கத்தில்,
படிக்கட்டில் அவன்...!
பேருந்தினுள் அவள்...!!

ஆசை காதலோ
அவள் அருகில்
அவனை போக சொன்னது...!

அடித்துப்பிடித்து
அவளருகில் சென்றான்
அவன்...!

இப்போது அவன்
இதயத்தில் பூட்டிவைத்திருந்ததை,
உதடுகளால் திற்ந்தான்...!

உன்னை நான்
உயிராய் காதலிக்கிறேன் என்றவன்,
என்னை நீ காதலிக்கிறாயா என
திருப்பி கேட்டான் அவளிடம்...!

இல்லை என்று
இதயம் தர மறுத்தாள் அவள்...!

இன்னொருமுறை கேட்டான்...!

முறைத்துப்பார்த்த அவளிடம்
தயங்கியபடியே கேட்டான்...!
வேறுயாரையாவது
விரும்புகிறாயா என்று...

அவள்
கைநீட்டி காண்பித்தாள்...
அடுத்த பேருந்து நிறுத்தத்தில்
அவளுக்காய் காத்துநின்ற
என்னை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

27 comments:

 1. enakku sirippu sirippaa varuthu ....

  aasai padalam anish athukkunnu paerasi padalaamaa....\
  kanavula kuda ithu nadanthu irukkathu ,,,,
  anishkku konjam karpanai athigam thaan,.....

  hero maththi irukkalam antha ponnu ..mattrabadi kavithai nice,,,

  ReplyDelete
 2. @kalai: இதுல சிரிக்குறதுக்கு என்னங்க இருக்கு? அடுத்தவன் கஷ்டப்பட்டு பிக்கப்பண்ணி வச்சிருக்குற ஃபிகர் பின்னாடி சுத்தினா பதில் இப்படிதான் இருக்கும்னு சொல்ல வந்தேன்.. அவ்ளோதான்... ;) அதுக்காக பஸ்ஸ்டாண்டில் காத்து நிக்குறவன் நானாதான் இருக்கணும்னு அவசியமில்ல.. அது யாரா வேணும்னாலும் இருக்கலாம்... okay?????? :)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 3. super anish. last la ungala kai netti last few lines amazing.. kadhal thorkama manasa udaikama aval kadhal sonna vitham super.. neenga yarkachi ippadi than propose panningala.. avanga ok sollitangala.anupavachi eluthinigalo.. unga life ippadi than nadanthatho..:)) :)) :)) :)) :)) :)) :)) ..

  ReplyDelete
 4. அட எடுங்கந்த குண்டாந்தடியை:))))... அது தான் தானாம் அவ்வ்வ்வ்வ்வ்:))) முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)))....

  எவ்ளோ இன்ரஸ்ட்டாப் படிச்சிட்டு வந்தேன் முடிவில அவ்வ்வ்வ்வ்வ்:))) எதிர்பாராத திருப்பம்:)) அழகா இருக்கு.

  ஏன் பஸ் ஸ்ராண்டில நிற்கிறீங்க மோட்டார் பைக் இல்லையோ? மீ எஸ்ஸ்ஸ்ஸ்

  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSxHIi38hp_6mhCYWi2BrAw2W-KpU59wrQYbvswv830OOy4VMPo[/im]

  ReplyDelete
 5. @kilora: ஏங்க நீங்க ஏன் எல்லாத்துக்கும் என்னையே இழுக்குறீங்க? பஸ் ஸ்டாண்டில் நிக்குற பையன் நான் இல்லீங்க.. அது வேற... :A:A:A:A:A

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 6. @athira: சே சே இதுக்கெல்லாம் வன்முறையை கையாளக்கூடாது.. எதையும் சந்திக்குற மனத்தைரியம் வேணும்... ;);)

  பஸ்ல வர்ற பிகரை பிக்கப் பண்ண பஸ் ஸ்டாண்டில் நிக்காம, சைக்கிள் ஸ்டாண்ட்லய நிப்பாங்க? :A:A

  இப்படி படம் போட்டா இங்க தெரியாதுங்க... :)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 7. அப்போ பூஸாரைச் சந்திப்பதாயின் பூஸ் ஸ்ராண்டிலயோ நிற்கோணும்?:A:A:A:A:A:A:A:A என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ கவிக்காவுக்கு என்ன ஆச்சு:R:R:R:R:R:R:R:R:R:R:R

  ReplyDelete
 8. @athira: ஓஓ அதுக்கு பூஸ் ஸ்டாண்டில் அல்ல.. பூஸ் கூண்டில் நிக்கணும்.. :A:A

  இப்படிலாம் கேள்வி கேட்டா :S:S:S:S:S

  நன்றி... :)

  ReplyDelete
 9. நல்ல வேளை!தப்பிச்சான் அவன்!!மாட்டினீரா?

  ReplyDelete
 10. அது உங்க லவ்வரா! என்ன கொடுமை சார் இது.

  ReplyDelete
 11. hmmmmmm good move:)

  ReplyDelete
 12. wonderful lines.... great... migavum rasithu rasithu padithen anish.. superb....

  ReplyDelete
 13. @சீனுவாசன்.கு: நீங்களுமா? :U:U அய்யய்யோ யாருமே என்னை நம்ப மாட்டேங்குறாங்களே... :Y:Y

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!! :)

  ReplyDelete
 14. @விச்சு: உங்க லவ்வரானு நீங்க கேட்டதுக்கு அப்புறம் சொல்ற இந்த “என்ன கொடுமை சார்”ல உள்குத்து ஏதும் இல்லையே...??? :Q:Q

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!! :)

  ReplyDelete
 15. @anishka nathan: ஹம்ம்ம்ம்..

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!! :)

  ReplyDelete
 16. @kavitha: வாங்க...

  வந்தமைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி...!! :)

  ReplyDelete
 17. அவளுக்காய் காத்து நின்றா என்னை...,
  >>>
  என்னால இந்த கொடுமைல்லாம் அனுபவிக்க முடியலை. நான் போயிட்டு அப்பாலிக்கா வரேன்

  ReplyDelete
 18. அவளுக்காய் காத்து நின்ற என்னை
  >>
  இந்த கொடுமைலாம் அனுபவிக்க என்னால் ஆகாது. நான் போயிட்டு அடுத்த போஸ்ட்டுக்கு வரேன்

  ReplyDelete
 19. தல வணக்கம் ...
  ஹா ஹா ...
  எப்படி இப்படி எல்லாம் ..
  வரிகளில் நல்லா விளையாடிருக்கிங்க ...
  வாழ்த்துக்கள் ...

  அதுவும் சில பொண்ணுங்க இப்படிதான் பின்னாடியே வருபவனிடம் முன்னாடியே சொல்லி இருந்தா இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டான்ல..
  இந்த பசங்களும் சரி இல்லை ..தான் ... என்ன பண்ணுவது .. அது சரி நீங்க எந்த நிறுத்தத்தில் நிக்கிறிங்க .. எனக்கு மட்டும் சொல்லுங்க தல ..

  ReplyDelete
 20. @ராஜி: ரொம்ப நல்ல முடிவு...! இப்பாலிக்கா போய் அப்பாலிக்கா வாங்க... ;)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 21. @அரசன்: அடடடாடா.. அது நான் இல்ல... வேற வேற.. ;)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல... :)

  ReplyDelete
 22. naan mattum thaan kadaisi variyai ethirkkiren nnu ninaichaa ulamae ethirkkuthu ....ha haa ahaaaaa...........

  anish kanavil kuda inimae intha maari yosikka mattinga yilla...

  sari adutha kavithai podungappaa ....

  ReplyDelete
 23. @கலை: எல்லாரும் இப்படி மொத்தமா கிளம்பிட்டா நான் என்ன பண்றது...??? :(:(

  நன்றி... :)

  ReplyDelete
 24. kathalai solla enakku theriya villai .. antha

  pennai varnitha murai alago alagu..ippadi ellam

  neenga pavathinga plese,neenga poga mattinganu

  enakku theriyum.summa thaan sonnen.

  by

  livina

  ReplyDelete
 25. @livina: வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி...!

  ReplyDelete
 26. Last line la avaka lover neka than endu solle erukeka romba love oda our kavitha unka kathal matherja unka kavithum nalla eruku all the best

  ReplyDelete