19 Dec 2011

சின்ன கவிதைகள் - இரவு பயணம்


மேடு பள்ளங்கள்...!
வளைவு நெளிவுகள்...!!
இருந்தாலும் நான்
இரவு முழுவதும் பயணிக்கிறேன்...!
உன் தேக பாதைகளில்...


***********************************************************************************
உதடுகள் உரசிக்கொள்ள
உயிருக்குள் தீப்பிடித்தது...!
பற்றி எரிந்ததோ நாம்...!!
முத்தம்...

***********************************************************************************தெரிந்தே தினம்தினம்
மோதிக்கொள்கின்றன
என் பார்வைகள்...!
உன் துப்பட்டா கோபுரங்களில்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

23 comments:

 1. அருமையான நெஞ்சை தொட்டுப் போகும்
  காதல் கவிதைகள்
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @Ramani: வாங்க ஐயா...!!

  வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...!!! :)

  ReplyDelete
 3. கவிதை சூப்பராத்தான் இருக்கு, ஆனாலும் கவிக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... குட்டித் தம்பி எண்டெல்லோ நினைச்சிருந்தேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:R:R:R:R

  ReplyDelete
 4. கவிதை குட்டிதான் ஆனா, எனக்கு பெரிய பெரிய கேள்வியெல்லாம் கேட்க வருது... ஆனா கேட்க மாட்டேன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... அதனால அடடடடக்கி வாசிக்கிறேன்..:T:T:T:T

  ReplyDelete
 5. கிரிஸ்மஸ் அலங்காரமோ? பட்டாசெல்லாம் வெடிக்குது புளொக்கில.... நல்ல சோடினை புளொக்க் கலகலப்பாக இருக்கு ஆனா கவிக்காவின் மனம்?:R:R:R:R

  ReplyDelete
 6. @anishka nathan: வந்தமைக்கும், ஸ்மைல் பண்ணியமைக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 7. @athira: அப்படியெல்லாம் நினைக்கப்படாடாது ;);)

  கேள்வி கேட்க்காதவரைக்கும் ரொம்ப நல்லது...! அப்புறம் பதிலும் எதிர்பார்க்காத மாதிரியே வரபோகுது.. கவிதை மாதிரி... ;) ஏன்னா நான் ரொம்ப நல்ல பையன்... தூங்கும்போது மட்டும்... :R:R:R:R:R

  ReplyDelete
 8. @athira: கிறிஸ்துமஸ்-க்கு வீட்டில் மட்டுமல்ல, ஃப்ளொக்கில் கூட லைட் போட்டு, tree வச்சு அலங்காரம் பண்ணனுமாம்.. பெரியவங்க சொல்லிருக்காங்க.. :R

  மனசு கூட பட்டாசு மாதிரிதான் இருக்குங்க... வெடிச்சிட்டு இருக்குனு சொல்ல வந்தேன்...! :R:R

  வருகைக்கும், கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! ;)

  ReplyDelete
 9. ஆஆஆஆஆஆஅ என்னாது இதயம் தானே வெடிச்சு அங்கின இங்கின தச்சு வச்சிருக்கிறீங்க? இப்போ மனசுமா? அவ்வ்வ்வ்வ்வ்.. அப்போ அடிபட்ட வாகனம்தேன் போல=)).... நேரே கராஜ்ஜிலதான் கொண்டுபோய் விடோணும்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் சொன்னது வாகனத்தை ஓக்கை..முறைக்கப்பிடா... நீங்க கொழுத்துங்கோ கொழுத்துங்கோ.... நான் பட்டாசைச் சொன்னேன்:A:A:A:A:A:A:A:A:A:A:A:A:A:A

  ReplyDelete
 10. அப்போ இனிமேல் தூங்கும்போது மட்டும் பதில் பொடுங்க ஓக்கை? அப்பத்தானே நல்ல பையன்...:R:R:R:R எங்கிட்டயேவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:H

  ReplyDelete
 11. @athira: ஆஆ என்னாது? அப்போ இதயமும் மனசும் வேற வேறயா..? நான் இரண்டும் ஒன்று என்றல்லோ நினைச்சுகிட்டிருந்தேன்...! :A:A

  நான் எப்போதுமே நல்லா கொழுத்துவேன்...! பட்டாசைதாங்க... :R:R

  அச்சச்சோ தூங்கும்போது பதில் போடணுமா? முடியாதே... :T உங்களுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குற மாதிரி, எனக்கு தூக்கத்துல பதில் போடுற வியாதி இல்லையே... :R:R:R:R:R:R:R:R:R:R:R

  நன்றி..! :)

  ReplyDelete
 12. எனக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி மட்டுமில்லை கடிக்கிற, பிராண்டுற வியாதியும் இருக்கு ஜாக்க்க்க்க்க்ர்தை... எங்கிட்டயேவா..:S:S...

  தூக்கத்தில செய்கிற தவறுகளுக்குத் தண்டனையும் இல்லை தெரியுமோ? பீ கெயார்ஃபுல்... நான் எனக்குச் சொன்னேனாக்கும்...க்கும்...க்கும்...:R:R:R:R:R

  ReplyDelete
 13. @athira: அச்சச்சோ இது ”பயங்கர” வியாதி ஆச்சே...! இந்த வியாதி இருக்குறதால பாவம்தான் டாக்டர்...! sorry sorry பாவம்தான் நீங்க... :R:R:R:R:R
  ((அய்யோ என்னை காப்பாத்துங்க.. யாரோ அரிவாளோட துரத்துறாங்களே...:R:R:R:R:R))

  ReplyDelete
 14. என்னாது அரிவாளோட துரத்துறாங்களா? ஆராக இருக்கும்? ஹையோ நானும் இல்லை.. நானும் ஓடிடுறேன்.... அது கவிக்காட நிழலாக்கும்...:R:R:R:R:R

  ReplyDelete
 15. @athira: ufff... நானே அரிவாள் சைஸ்ல இத்துனூட்டு சின்னதா தான் இருப்பேன்...! அவ்வளவு சின்ன பையன்ங்க...! என்னபோய் இப்படி சொல்லிட்டீங்களே.... :T:T

  நன்றி...! :)

  ReplyDelete
 16. kavithai thodarum nenaichen but little bita finished pannitinga.. little bita irundhalum romba kadhala kotti irukinga.. yaro yaro.. na ungala chinna paiyan nalla paiyanu nenaichu irundhen.. ana.. :P :P :P :P :P :P

  ReplyDelete
 17. @kilora: ஏங்க உங்களை அப்படி நானா நினைக்க சொன்னேன்...? :A:A

  இப்படி கவிதை எழுதுறவன் கெட்டவனா? அய்யோ அய்யோ...!!!! அப்போ............. சரி வாணாம் வாணாம் விடுங்க...:T

  நீங்க சொல்ற மாதிரி நான் இந்த கவிதையில் எங்கயும் "காதலை” கொட்டலையே... :Y:Y

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 18. முதல் இரண்டிலும் ரசணையின் வெளிப்படும் , வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த சொற்களும்
  அருமை , இனிமை ...
  கடைசி ஒன்றில் எனக்கு ஏனோ இடிக்குது . வார்த்தையை மாற்றி போட்டால் அழகு கூடும் என்று தோன்றுகிறது தல ..
  ரசனை மிகுந்த படைப்புக்கு அன்பு வாழ்த்துக்கள் தல .. கலக்கிட்டிங்க

  ReplyDelete
 19. @அரசன்: உண்மைதான் தல.. அந்த கவிதையில் ஏதோ இடிக்குது...! ”இதுபோன்ற” சில அழகான விசயங்களை தைரியமாக சொல்ல முற்படும்போது எப்படி சொல்வது என தெரியாமல் என்னை போன்ற(கவிதை என்கிற பெயரில் மொக்கை போடுறவங்களுக்கு) வார்த்தைகளில் சில பல பிரச்சனைகள் வரலாம்... அதனால என்னையே நான் மன்னிச்சுகிட்டேன்... :)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 20. அனீஷ் தம்பி காதலில் விழுந்துட்டாலே இப்படித்தான் கலக்கலா கவிதை வரும். பிளாக்கும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. @ராஜி: என்னமோ போங்க.. கீழ விழுந்திட்டா இப்படித்தான் ரத்தம் வரும்னு சொல்ற மாதிரி சொல்றீங்க...!
  சும்மா தமாசு...! :D

  கிறிஸ்துமஸ் வருதில்ல...! அதான் பிளாக் இப்படி இருக்கு... :)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!! :)

  ReplyDelete
 22. idhu kavithai illa adhukkum meela athaiyum thandi

  ReplyDelete
 23. @livina: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete