இதழ்கள் இல்லாமல் இசைக்கிறாய்...!
நீ இதயத்தின் ஓசையா...?
காதோடு தினம் பேசினாய்...!!
நீ அறிவியலின் பாஷையா...??
கைக்குள்ளே அடங்கினாய்...!
நீ ஹைக்கூ கவிதையா...?
கண்களுக்கு அதிசயமானாய்...!!
நீ காலம் சொல்லும் கதையா...??
விரல் நுனியில் விழிக்கிறாய்...!
நீ விஞ்ஞான வித்தையா...?
குட்டி கடிதம் சுமக்கிறாய்...!!
நீ மின்சார வார்த்தையா...??
உலகத்தை உன் கையில் ஏந்தினாய்...!
நீ ஹெர்குலஸ் சிலையா...?
உலகத்தை நீயே ஆள்கிறாய்...!!
நீ கடவுள் அறியாத கலையா...??
காற்றோடு குரலை கலக்கிறாய்...!
காசு தீர்ந்தால் கசக்கிறாய்...!!
ரீ-சார்ஜ் செய்தால் மீண்டும் பிறக்கிறாய்...!
ரிங்டோனாய் காற்றில் பறக்கிறாய்...!
செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்
செல்போனே...
-----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
hi anish ,
ReplyDeleteexcelent
romba super kavithai
wowwwwwwwww
hema
Niceeeeeeee
ReplyDeletecellphone-a kuda vitu vaikiliya? hhehehe so nice
ReplyDeleteஅருமையான வரிகள் பாராட்டுக்கள்
ReplyDeleteஅழகான சிந்தனை
ReplyDeleteஅதி அற்புதம்.. பாராட்டுக்கள்.. மிக மிக ரசித்துப் படித்தேன்... அருமை
ReplyDeletecell phone is proud of u anish
ReplyDeleteநன்றி!!!
ReplyDelete