பலிக்காத கனவு...
அவள் என்னை
வேண்டாமென்று சொன்ன
அந்த நொடி
இட நெஞ்சில் இதயம்
வெடித்துவிட்ட வலி...!
ஒருதலையாய் காதலிப்பவனுக்கு சொல்லும்
ஒற்றை பதிலல்லவா இது...!
அவளும் நானும்
ஓருயிராய் ஆனபின்பும்
அவள் உதட்டில் இது
ஓடி வந்து அமர்ந்தது எப்படியோ...!!
வேண்டாம் என்று என் காதலை
வேரோடு சாய்த்துவிட்டாள்...!
அடி நெஞ்சில்
ஆணிவேரை ஊன்றி நிற்கும்
அவள் காதலை நான் என்ன செய்வது...?
வங்க கடலும்
கங்கை நதியும் இப்போது என்
கண்ணிர் துளிகளாய்...
சாகும் வரை - நான்
உன்னோடிருக்க வேண்டுமென,
என்றொ ஒருநாள்
என்னிடம் அவள்
சத்தியம் வாங்கிக்கொண்டதாய் ஞாபகம்...!
அவள் என்னோடிருக்கும் வரைதான்
நான் உயிரோடிருப்பேன் என்பதை
இனிமேல் எப்படி நான்
அவளுக்கு புரியவைப்பது...!
கடற்கரையோர காற்றில்
தனிமையை ரசித்திருக்கிறேன்...!
காகிததுண்டில்
கவிதை கிறுக்கும் நேரங்களிலும்
தனிமையை ரசித்திருக்கிறேன்...!
ஆனால்,
அவள் இல்லாத தனிமைகள் - என்
அடிநெஞ்சில் வலிக்கிறதே...!
நிலவில்லாத இரவிலும் - அவள்
நிழல் தேடி மனம் தவிக்கிறதே...!!
மறந்து சென்றுவிட்டவளை - என்னால்
மறக்க முடியவில்லை...!
அவளை சுமந்த - என்
இதய கிண்ணத்தில்
இன்னும் மிச்சமிருக்கிறது...!
கொஞ்சம் நினைவு பருக்கைகள்...
அவள் நினைவுகள் முடிந்தால்
என் இதயம் மறுபடியும்
காலியாகியும் விடலாம்...!
இல்லை கல்லாகியும் விடலாம்...!
காதலில் நான்
கற்றுக்கொண்டது,
காதலை மட்டும்தான்...
காதலொன்றும்
கடவுள் இல்லை...!
இமை மூடி
இருட்டில் காணும்
கனவுதான் காதல்...!
சிலருக்கு பலித்துவிடும்...!
எனக்கு என் காதலோ
பலிக்காத கனவு...
----அனீஷ்...
கவிதை சூப்பர்.... கதை கேட்டதுபோல இருக்கு.
ReplyDeleteஓடும் பஸ்ஸையே பின் தொடர்ந்து செல்லக்கூடாது, வேறொன்று பின் தொடர்ந்து வரும்... அப்படித்தான் காதலும்...
@athira: ரொம்ப நன்றி...!
ReplyDeleteஓடும் பஸ்ஸை பின்தொடர்ந்து விரட்டிபிடிக்குற பழக்கம் இல்லை...! பஸ்ஸில் ஏறிய பின்பு பாதி வழியிலேயே இறக்கிவிட்டால் என்ன செய்வது? :)
வலி தெரியுது. ஏன் வேண்டாம் சொன்னாங்ளோ தெரியலை :P
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு
vendam sollumbodum aval nenju chahum... valikim... en endral kadal apadi dan valiye dan kudukum
ReplyDelete@anishka nathan: ஓ அப்படியா? எனக்கு தெரியதே...! :) வருகைக்கு ரொம்ப நன்றி...!
ReplyDeleteவாழ்வில் எதுவும் நிரந்தரமல்ல! சோகங்களும்தான் தாண்டிச்செல்லத்தான் வேண்டும். நல்லதொரு கவிதை
ReplyDelete@Gayathri: கருத்துக்கு மிக்க நன்றி...! :)
ReplyDelete@அம்பலத்தார்: வருகைக்கும், கருத்துக்கு மிக்க நன்றி...! மீண்டும் வருக... :)
ReplyDelete