தனிமையான
என் பயணங்கள்...!
பாலைவனமாம் என் மனதில்
பருவமழை போல்
பெய்தாய் நீ...!!
தனிமையில்
நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!
உன் சந்தோஷங்களை
எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!
சின்னதாய் இப்போது ஒரு
சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்...!!
நட்பாய் நீ என்
நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்...!!
உன் நட்ப்பென்னும்
விரல் பிடித்து நடப்பதால்-இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்...!
நட்ப்போடு சாய்ந்துகொள்ள-உன்
தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்...!!
ஆகாயம் ஒருநாள்
அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்...!!
ஆனாலும்
என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ....
என் பயணங்கள்...!
பாலைவனமாம் என் மனதில்
பருவமழை போல்
பெய்தாய் நீ...!!
தனிமையில்
நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!
உன் சந்தோஷங்களை
எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!
சின்னதாய் இப்போது ஒரு
சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்...!!
நட்பாய் நீ என்
நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்...!!
உன் நட்ப்பென்னும்
விரல் பிடித்து நடப்பதால்-இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்...!
நட்ப்போடு சாய்ந்துகொள்ள-உன்
தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்...!!
ஆகாயம் ஒருநாள்
அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்...!!
ஆனாலும்
என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ....
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
கவிக்கா ...கவிக்கா.. என்ன ஒரு கற்பனை , சொல்ல வார்த்தையில்லை எனக்கு, மிக அழகாக வர்ணித்திருக்கிறீங்க நட்பை.
ReplyDelete//உன் சந்தோஷங்களை எனக்குப் பரிசளித்துவிட்டு.. என் கவலைகளை நீ களவாடிச் செல்கிறார்//// ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த வரிகள்.
நேரத்தோடு போராடினாலும், பதில் அனுப்பாமல் போக முடியவில்லை என்னால். உங்கள் ஏனைய படைப்புக்களையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
very nice.
ReplyDeleteமிக நன்று
ReplyDeleteஎனக்கு வேண்டும்
ReplyDeleteஎன் தோழியாய் நீ ............
உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேற வாழ்த்துக்கள்.
உண்மை அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் .......
பாரட்டிய அனைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!
ReplyDeleteபாரட்டிய அனைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!
ReplyDeleteadu yaru?????????
ReplyDelete@anishka nathan: ஒரு தோழிதான்...! வருகைக்கு ரொம்ப நன்றி...!
ReplyDeleteஅருமை அருமை அருமையான கவிதை நண்பரே
ReplyDeleteஉங்கள் ஏனைய பாராட்ட வார்த்தைகளே இல்லை
ReplyDeleteநான் என் இறந்தகால வாழ்க்கைக்கு பொய் வந்துவிட்டது பொல் இருக்கிறது உணர்வு தந்த உங்களுக்கு நன்றி
ReplyDelete