28 Feb 2011

பள்ளிக்கூட பாடம்


அந்த பக்கம்
முதல் பெஞ்சில் நீ...!
இந்த பக்கம்
கடைசி பெஞ்சில் நான்...!

நமக்குள்
இடைவெளி இருந்தாலும்,
இடையிடையே
நீ வீசும் - அந்த
ஓரப்பார்வையில்
நமக்குள் இருக்கும் - அந்த
தூரம் கூட உடையும்...!

நீ சமைத்த உணவு என்று
நீ சொல்வதாலென்னவோ,
உணவு இடைவேளைகளில்
உன் வீட்டு உணவில்தான்
நான் பசியாறியிருக்கிறேன்...!

என் வீட்டுப்பாட புத்தகத்தில்
எதையும் நான்
எழுதியதில்லை...!
என் வீட்டுப்பாட புத்தகத்திலுள்ள - உன்
அழகிய கையெழுத்தின்
அடையாளங்களை - எந்த
ஆசிரியரும் கண்டுபிடித்ததுமில்லை...!

பள்ளிக்கூடத்திலிருந்து
உன் வீடுவரைக்கும்
பழுதடைந்த சாலை...!
கால்களை பதம்பார்க்கும்
கரடுமுரடான கற்கள்...!
நடப்பதென்னவோ நீதான்...
வலிப்பதோ என் கால்கள்...

விடுமுறை நாட்களில்
விட்டுவிட்டு சாவதுபோல் உணர்வு...!

காதலா நட்பா
கண்டுபிடிக்கமுடியாத
கேள்வியாய் அந்த உணர்வு...

அன்றொருநாள்,
அதிக மதிப்பெண் வாங்கவில்லையென
ஆங்கில ஆசிரியர் - உன்னை
அடித்துவிடவே,
பள்ளிக்கூடம் முடிந்து
போகும் வழியில்,
என் தோளில் சாய்ந்து
அழுதாய் நீ...!

நினைவாய் அந்த நிகழ்வு...!

உன்னை நான் தொலைத்து
வருடங்கள் பலவாகிவிட்டது...!

உன் கண்ணீர் துளிபட்ட
என் சட்டையும்
பழையதாகி கிழிந்துபோய்
பலநாளாகிவிட்டது...!
ஆனால்,
அந்த கண்ணீர் துளியை மட்டும்
அடிக்கடி இப்போதும்
நான் உணர்வதுண்டு...!!
என் கன்னங்களில்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

10 comments:

  1. ரசிகன்March 01, 2011 10:38 pm

    பள்ளிக்காதலின் நினைவுகள். படிப்பவர்களின் கண்களிலும் நினைவுகளின் கண்ணீர்துளி அரும்புவது நிச்சயம். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, அனுபவம் கொட்டப்பட்டிருக்கு... கவி வடித்த விதம் அருமை.

    அதென்னவோ தலைப்பு பார்த்த நேரம் தொடங்கி உள்ளேவர முயன்று தோத்து, இப்போதான் வரமுடிந்தது.

    ReplyDelete
  3. @ரசிகன்: மிக்க நன்றி ரசிகன்.

    ReplyDelete
  4. @athira: ரொம்ப நன்றி...!
    பெரும்பாலானவர்களின் பள்ளிக்காதலின் அனுபவம் இதுவாகத்தான் இருக்கும்.! ஆனால் எனது அனுபவத்திலிருந்து ஒருதுளியை கூட, இந்த கவிதையின் நான் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை...!

    IE பிரவுசரை பயன்படுத்தினால், என் வலைப்பூ ஓபன் செய்வதில் பிரச்சனைகள் வரலாம்.

    ReplyDelete
  5. சில ஞாபகங்கள் நினைவில் நின்று நீங்குவதில்லை.

    ReplyDelete
  6. hmmmm romba nalla eruku

    ReplyDelete
  7. @anishka nathan: ரொம்ப நன்றி...!

    ReplyDelete
  8. skoolaye aarambichuteengala Anish...
    But really superb...
    Kalakureenga...!
    :C :C :C

    ReplyDelete
  9. @நிலாமதி : உண்மைதான்... :) வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  10. @Kaavya : ஆமா school'லயே ஆரம்பிச்சிட்டேன்... படிக்குறதுக்கு.. =))=)) ஆமா நீங்க எதை கேட்டிங்க..? :T:T வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete