25 Apr 2011

சிறகொடிந்த பறவை நான்...

 

வலிகளால்
வரையப்பட்ட
சித்திரங்களால்
சிக்கிமுக்காடுகிறது...!
என் இதயம்...

காயத்திற்கு தடவிய
மருந்தே,
என் உயிரை சமைத்து
விருந்து வைக்கிறது...!

எண்ணங்களுக்குள்
ஏதோ ஆக்கிரமித்துகொள்ள,
கவிதைகள் கூட
கண்ணீரையே பிரசவிக்கிறது...!

தொட்டதெல்லாம்
தோல்வியில் முடிய,
ஆசைகளெல்லாம்
ஆகாயத்திற்கு மேல்...!
எட்டாத தூரத்தில்...

ஏமாறி ஏமாறி
பழக்கப்பட்டதாலென்னவோ
என் மனதே - என்னை
ஏளனமாய் பார்க்கிறது...!

நம்பிக்கை துரோகமும்,
நயவஞ்சக பேச்சும் - என்
இதயத்தை வளைத்து
இன்னும் கொஞ்சம் முடமாக்குகிறது...!

நிறமற்ற
இரத்த துளிகளை
நிறுத்தாமல் உற்பத்திசெய்கிறது...!
கண்கள்...

பூமிக்கு மேலே
நரகத்தை சுமந்துகொண்டு
ஒரு வாழ்க்கை...

பூமியின் சாபமாய்
இன்னும் நீள்கிறது
என் ஆயுள்...

வாசலில் மிதிபடும்
அதிகாலை கோலமாகவும்,
நீர் தேடி உயிர் விடும்
ஒரு பாலைவனமாகவும்,
கொஞ்சம் கொஞ்சமாய்
பலியாகிபோகிறேன் நான்...!

மழையிலே கரைந்திடும்
வானத்து முகிலாகவும்,
இரவு வந்தால் சிதைந்திடும்
ஆயுளற்ற பகலாகவும்,
எனக்கே தெரியாமல்
என்னமோ ஆகிறேன் நான்...!

சுவாசிப்பதை கூட
சுமையாக உணர்கிறேன் இன்று...!
அந்த ஆக்ஸிஜன் மேலும் இப்போது
அவ்வளவாய் நம்பிக்கையில்லை...!

முடிவை தேடி
ஒரு காத்திருப்பு...!
சுமைகளை சுமந்துகொண்டு...

பறப்பது கூட
வெறும் கனவாகிப்போய்,
இன்று மெல்ல மெல்ல
உயிர்விட துடிக்கும் - ஒரு
சிறகொடிந்த பறவை நான்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

8 comments:

  1. :((((( edu madari ezhudadingo pleaseeeee

    ReplyDelete
  2. good one. keep it up

    ReplyDelete
  3. @anishka nathan: ufffffffff...... கருத்துக்கு நன்றி...!

    ReplyDelete
  4. @Maha, USA: மிக்க நன்றி...!

    ReplyDelete
  5. இதயத்திலயோ சிறகு முளைச்சிருக்கு:)?.

    கவிதை அண்ட் கற்பனை சூப்பர்.

    கொஞ்சம் பொறுங்க கவிக்கா...2012 வெகு தூரத்திலில்லை...ஆ...நாய்க்குட்டியைக் காணவில்லையே... மீ எஸ்ஸ்ஸ்:))

    ReplyDelete
  6. @athira: ஓஓ உங்களுக்கு தெரியாதா? இப்போ எல்லாருக்கும் இதயத்தில்தான் சிறகு முளைக்குதாம்... இன்னும் கொஞ்சம் நாள் போச்சுன்னா இதயத்தில் கை, கால் , வால்ல்ல்ல்ல்ல் எல்லாம் முளைக்கும்... :)

    ஹுகும்... 2012 வரைக்கும் எல்லாம் இது தாங்காது...! அதுக்கு முன்னாடியே போயிடும்....!

    கருத்துக்கு நன்றி...!!

    ReplyDelete
  7. Very nice Anish...
    Kalakureenga...!
    :C :C :C

    ReplyDelete
  8. @Kaavya : ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete