
பாதியிலே பறிபோய்விட்ட
பள்ளிக்கூட காதலின் சுவடுகளை
அடிமனதில் மறைத்துவிட்டு,
ஆறாண்டு இடைவெளிக்குபின்
இன்னொருவளிடம்
இதயத்தை தொலைத்த - என்
இனிய நண்பன்...!
காதலித்தவள்
கைவிட்டாள் என்பதற்காகவே
காதலின் வலிகளை
மதுவில் மறக்க பழகி
கடைசியில் ஒரு
கயிற்றில் முடித்த - தெருவின்
கடைசி வீட்டு அண்ணா...!
காதலித்தவனுடனயே
கடைசி வரை வாழ்ந்து முடிக்க
அப்பா அம்மாவை எதிர்த்து
அவசரமாய் மறைமுகமாய்
மாலை மாற்றிக்கொண்ட
எதிர்வீட்டு அக்கா...!
ஏமாற்றிய காதலியால்
எல்லா காதலும்
போலியென காரணம் சொல்லி
தினம் ஒரு பெண்ணுடன்
சென்னையை சுற்றும்
அலுவலக நண்பன்...!
பத்தாண்டு
திருமண வாழ்க்கையிலே
மொத்தமாய் வெறுத்துபோய்
நீதிமன்ற வாசலிலே
விவாகரத்துக்காய் காத்துகிடக்கும்
பக்கத்து வீட்டு காதல் ஜோடி....!
எண்பது வயதிலும்
திகட்டாத காதலை
தினம் தினம்
பகிர்ந்து வாழும்
மூன்றாம் எண் வீட்டில் வசிக்கும்
மூத்த காதலர்கள்...!
கதலித்ததாலயே
கவிதை எழுத கற்றுக்கொண்ட
நான்....!
காதலின் இந்த
கதைகளுக்கு முடிவுகளில்லை...!
காதலைப் போலவே
காதலின் கதைகளும் தொடரும்...
----அனீஷ் ஜெ...
 
 
 Send Your Comments on Whatsapp. Click Here
 Send Your Comments on Whatsapp. Click Here
 
 
 
 
 
unmai !
ReplyDeletearumai!
nice...
ReplyDeleteமுடிவில்லைதான் பள்ளி நினைவுகளுக்கும்,காதல் நினைவுகளுக்கும்/
ReplyDeleteஉண்மை சம்பவங்கள்...
ReplyDeleteநீங்கள் காதலின் கதைகளை தொடர்க...
நன்றி...
super anish.. nice.. unmai sambavathai alagana alamana valigalai alagana varthaiyil muditha kavithai super.. :) :) :)
ReplyDeletehmmm good continue:))
ReplyDelete