
என் மூச்சுப்பையின்
சுவாசத்தை - என்
கருப்பைக்கு
இடமாற்றினேன்...!
மிச்சத்தில் தான் - என்
இதயம் துடித்தது....!
என் கருப்பையோ
உன்னை சுமக்க,
என் மனதோ
உன்னை காணும்
ஆசைகளையும்,
உனக்கான - என்
அன்பையும் சுமந்தது...!
முதன் முதலில்
உன்னை என் கைகளில்
ஏந்திய மகிழ்ச்சியை
எப்பொழுது உன்னை பார்த்தாலும்
என் உயிருக்குள் உணர்கிறேன்...!
மூன்று மாதங்கள்...!
மூன்று வயது...!!
முப்பது வயது....!!!
உன் எந்த வயதிலும்
உன்னை தொடும்
சிறு காய்ச்ச்ல் கூட - என்னை
கண்கலங்க வைத்துவிடுகிறது...!
வலிக்காமல் அடிக்க எனக்கும்,
வலிக்காமலே அழ உனக்கும்
நன்கு தெரியும் என்பது
நம் இருவருக்குமே தெரியும்...!
நொடிகள் ஒவ்வொன்றிலும் - நான்
உன் நலமே விரும்புகிறேன்...!
இந்த தள்ளாத வயதிலும்...
முதியோர் இல்லத்திலிருக்கும் என்னை
மூன்று மாதத்திற்கு பிறகு
இன்று தான் பார்க்க வந்திருக்கிறாய்...!
தள்ளாடி நடந்தே
வாசல் வரை வந்து - உன்னை
வழியனுப்புகிறேன்...!
மகனே...
பத்திரமாய் சென்று வா...!
காத்திருப்பேன் நான்....!!
அடுத்த ஜென்மத்திலும்
நீதான் எனக்கு மகனாக
பிறக்க வேண்டுமென்ற
வேண்டுதல்களோடு...
----அனீஷ் ஜெ...
சுவாசத்தை - என்
கருப்பைக்கு
இடமாற்றினேன்...!
மிச்சத்தில் தான் - என்
இதயம் துடித்தது....!
என் கருப்பையோ
உன்னை சுமக்க,
என் மனதோ
உன்னை காணும்
ஆசைகளையும்,
உனக்கான - என்
அன்பையும் சுமந்தது...!
முதன் முதலில்
உன்னை என் கைகளில்
ஏந்திய மகிழ்ச்சியை
எப்பொழுது உன்னை பார்த்தாலும்
என் உயிருக்குள் உணர்கிறேன்...!
மூன்று மாதங்கள்...!
மூன்று வயது...!!
முப்பது வயது....!!!
உன் எந்த வயதிலும்
உன்னை தொடும்
சிறு காய்ச்ச்ல் கூட - என்னை
கண்கலங்க வைத்துவிடுகிறது...!
வலிக்காமல் அடிக்க எனக்கும்,
வலிக்காமலே அழ உனக்கும்
நன்கு தெரியும் என்பது
நம் இருவருக்குமே தெரியும்...!
நொடிகள் ஒவ்வொன்றிலும் - நான்
உன் நலமே விரும்புகிறேன்...!
இந்த தள்ளாத வயதிலும்...
முதியோர் இல்லத்திலிருக்கும் என்னை
மூன்று மாதத்திற்கு பிறகு
இன்று தான் பார்க்க வந்திருக்கிறாய்...!
தள்ளாடி நடந்தே
வாசல் வரை வந்து - உன்னை
வழியனுப்புகிறேன்...!
மகனே...
பத்திரமாய் சென்று வா...!
காத்திருப்பேன் நான்....!!
அடுத்த ஜென்மத்திலும்
நீதான் எனக்கு மகனாக
பிறக்க வேண்டுமென்ற
வேண்டுதல்களோடு...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
kanneer kavithai....
ReplyDeleteவரிகள் மனதை உருக வைத்து விட்டது...
ReplyDeleteஆவ்வ் நெஞ்சை உருக்கி விட்டது கவிதை.
ReplyDeleteகாதலில் இருந்து எப்பூடி இப்படிக் கவிதைக்கு கவிக்காவால் மாற முடிந்தது? மாத்தி ஓசிக்க ஆரம்பிச்சிட்டீங்களோ?:):R:R:R:R
தாய்மை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteungaloda frienda irukkanum pola irukku anna unga phone number tharuvingala plz
ReplyDeleteanish varthai illai unnaidam solla.. handsuf anish.. marvaleous lines.. super.. super super............................................ :L:L:L:L:L:L:L:L:L:L:L:L.. marupadi marupadi padika vaithu nekila vaikum varigal... thanks anish,
ReplyDeleteyes as u said I got tears....
ReplyDelete