
இருகைகளையும் நாம்
இறுக்கி கோர்த்தபடியே
நீண்டதூரம் நடந்திருக்கிறோம்...!
இருக்கைகளின் எதிரெதிரில்
இருவிழியோடு விழி உரசி
முகம் நோக்கி அமர்ந்திருக்கிறோம்...!
ஊட்டிவிடப்பட்டால்
உணவில் சுவை அதிகரிக்குமென
மனதிற்குள் நம்பியிருக்கிறோம்...!
இருளை போர்த்திக்கொண்டு
இரவு முழுவது நாம்
அலைபேசியில் ஆரத்தழுவியிருக்கிறோம்...!
இமைகளை இறுக்கி மூடியே
இரு உதடுகளால் - நம்
எச்சிலின் ருசி அறிந்திருக்கிறோம்...!
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது
குடும்பத்துடன் எங்கு வசிப்பது வரை
முடிவெடுத்து முடித்திருக்கிறோம்...!
இப்போது சொல்...!
என்னை மறப்பதென்பது உனக்கு
அவ்வளவு எளிதானதா...?
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
Greet u r
ReplyDeleteVery nice
ReplyDelete"என் சுமையை ஏற்க உன் தோள் கேட்கவில்லை.. என் வலியை உணர உன் செவி கேட்கிறேன்…"Super ha iruku
ReplyDelete