22 Mar 2017

அவள்தானா நீ...


ஹாய்...!

நிமிடங்கள் சிலதாய்
நீ வரவேண்டி காத்திருந்து
எதிரில் வந்த உன்னிடம்
ஏதேதோ பேசுவதற்காய் மன்னிக்கவும்...!

ஒரேயொரு கேள்வியின்
ஒருவார்த்தை பதிலொன்றை
ஒருமுறை சொல்லிவிடு நீ...!

அழகான பெண்ணொருத்தியின்
ஐந்து விரல்களையும்,
இறுக்கி பிடித்துக்கொண்டு
இரவில் நடப்பதாய் கனவொன்று கண்டேன்...!

நல்ல பொண்ணாதான்
நாங்க உனக்கு கட்டிவைப்போமென
அம்மா ஒருமுறை சொன்னதாய் ஞாபகம்...!

உனக்காக பிறந்தவள்
எங்க இருக்காளோ இப்ப என
தோழியும் சிரித்தாள்...!

உன்னை கல்யாணம் செய்து
காலம்பூரா கஷ்டப்படபோறவ யாரோவென
நண்பர்களின் கூட்டமும் கிண்டலடித்தது...!

இந்த வருடம் காதல் கைகூடுமென
கலாண்டரின் ஆண்டு பலனும்
சத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறது....!

பதில் சொல்லிவிட்டு போ...!

அத்தனைபேரும் இப்படி சொல்லும்
அவள்தானா நீ...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

10 comments:

  1. ஹா ஹா ஹா எப்ப பார்த்தாலும் ஒற்றை விரலைப் பிடிக்கிறதும் கையைப் பிடிக்கிறதும்தான் வேலையாப்போச்சு கவிக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. ஆனாலும் மிகவும் ரசித்தேன் அழகிய கவிதை, ஆனாஎழுத்துபிழை இருக்கிறது போல தெரியுது, திருத்துங்கோ..

    நல்ல” பொண்ணாத்தான்..

    எங்கே” இருக்காளோ... இப்படி வரவேணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆங் ! நானும் இதை யோசித்தேன். திரும்ப திரும்ப இதையே எழுத்திட்டு இருக்கேன். என்ன பண்றது எப்படி யோசிச்சாலும் கடைசில எழுதி முடிக்கிறப்போ இதுலதான் வந்து நிக்குது!

      கொஞ்சம் பிசி ! அவசரத்துல எழுதுனதால அதிக எழுத்துப்பிழைனு நினைக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ! திருத்திவிட்டேன்.

      Delete
    2. ஆனா சுத்திச் சுத்தி இதுக்குள்ளயே நின்றாலும், ரசிக்க நல்லாத்தான் இருக்கு:)..

      எங்கே அந்த ஓடும் பப்பி, பூஸ் எல்லாம் இங்கு போடுவமே.. அதை எடுத்திட்டீங்களோ?:).

      Delete
    3. நன்றி நன்றி !
      டெம்ப்லேட் மாற்றிய பிறகு அதை போட மறந்துவிட்டேன். மறுபடியும் போட முயற்சிக்கிறேன்

      Delete
  2. Wowww.... superbbb.....

    ReplyDelete
  3. கோபால கிருஷ்ணன்May 15, 2017 1:54 pm

    அருமையான கவிதை..!

    ReplyDelete
  4. Simply superb

    ReplyDelete
  5. Very nice kavithai

    ReplyDelete