கண் பட்டவை
கை தொட்டவையென
பார்த்தவை அனைத்தையும்
பறித்துக்கொண்டேன்...!
நிராகரிக்க மனமில்லாமல்
நிரம்பி வழியும்வரை
சேர்த்து மெல்ல
சேகரித்தேன்...!
அவையனைத்தையும்
அள்ளியெடுத்து நான்
கசக்கி பிழிந்து
கலந்தெடுத்தேன்...!
பெரும் மதிப்பு கொண்ட
பெட்டியொன்றில்
உருவாகிய கலவையை
ஊற்றி வைத்தேன்...!
அப்பெட்டியை நான்
அப்படியே தூக்கி
எவருக்கும் தெரியாத
ஏதோ ஓரிடத்தில் புதைத்தேன்...!
தினமும் நான் அதை
திறந்து பார்த்தே
கலவையின் நிலமையை
கண்காணிகத்தேன்...!
ஆண்டுகள் பல கடக்கிறது....!
அழிந்து போகுமென நான்
அவதானித்தது இங்கே
தவறாய் போவதற்கான
தடம் தெரிகிறது....!
கெட்டுப்போகவும்
கரைந்து தீரவும் செய்யாமல்
விடியும் நாளொன்றுக்கும்
வீரியமே கூடுகிறது...!
இன்னும் நான்
இதயப்பெட்டிக்குள் ஊற்றி
உயிரில் புதைத்திருக்கிறேன்...!
உன் நினைவென்னும் மதுவை...
----அனீஷ் ஜெ...
ஹா ஹா ஹா வழமைபோல் அருமை, எப்படித்தான் சுத்தினாலும் முடிவு என்னமோ "அங்கு" தான் வந்து நிக்கிது.
ReplyDeleteஅதுசரி, வேறு எங்கோ ரைப் பண்ணி இங்கு வந்து பேஸ்ட் பண்ணினனீங்களோ? நிறைய எழுத்துப் பிழைகள்... பிழை அல்ல ஏதோ கீ போர்ட் கோளாறு, சரி பண்ணுங்கோ.
Super
ReplyDeleteBeautiful
ReplyDeleteHai bro how are you! Your poems are all amazing
ReplyDeleteம்ம்ம்ம் அருமையோ அருமை....நெஞ்சில் நின்று இனிக்கிறது வரிகள்....
ReplyDeleteHi...fantastic lines ..keep up
ReplyDeleteHi...fantastic lines ..keep up
ReplyDeleteVery nice
ReplyDelete