உயிரோடு உயிர் வந்து
மோதிய கணத்தில்
உடைந்து உறைகிறது...!
காதல் துளிகள்...
இதயம் சுருங்கி விரிகையில்
உடலெங்கும்
உருகி பாய்கிறது...!
ரத்தத்தோடு காதலும்...
சிறகுகளில்லாமலே
சிகரங்களுக்கும் உயரே
படபடவென பறக்கிறது...!
காதல் தீண்டலில் மனது...
கோபத்தை விடவும்
அன்பைதான் அதிகம்
அடையாளம் காட்டியிருக்கிறது..!
ஊடல் பொழுதுகள்...
மெல்லிய மவுனங்கள்...!
செல்ல சண்டைகள்...!!
கொஞ்சல்கள் - சில
கெஞ்சல்கள்...!!!
காதலில் மட்டுமே
இவையெல்லாம் அழகாக...
உச்சிவெயில் நிலா....!
கொஞ்சிபேசும் சிலை...!!
விழிமீன் - சிரிக்கும்
இதழ்வழி தேன்...!!
பொய்களும் ரசிக்கப்படுவது
காதலில் மட்டும்தான்...
வெயிலில் நனைவதும்
மழையில் வியர்ப்பதும்
காதலிலே சாத்தியம்...!
கவிதைகளே அதற்கு சாட்சியம்...!!
காதல்
சிரிப்பையும் தருவதுண்டு
சிலசமயம் கண்ணீரையும் தருவதுண்டு...!
சிலரை கரை சேர்த்ததுண்டு...!
சிலரது கனவுகளை தகர்த்ததுண்டு...!!
வலிகளை தருவதென்று தெரிந்தாலும்
வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது மனது...!
காதல் செய்ய...
காரணம்...
காதலில் மட்டுமே உணரப்படுகிறது...!
வலிகள் கூட சுகமாக...
----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
காதலை பற்றிய படைப்பு அருமை நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள் மற்றும் அன்பர் தின நல்வாழ்த்துக்கள்
காதலர் தினத்தில் காதலை அசைபோடும் கவிதையா.. கலக்கல், வாழ்த்துக்கள்.
ReplyDelete@செய்தாலி: ரொம்ப நன்றி தோழரே...!
ReplyDeleteஅன்பர்தின வாழ்த்துக்கள்...!!
@athira: ரொம்ப நன்றி...!
ReplyDeleteஅன்பர்தின வாழ்த்துக்கள்...!!