23 Feb 2011

சாலையோர மழைத்துளிகள்...


மேகக்குடம் உடைந்து
மழைத் தண்ணீர்
மண்ணை நோக்கி
கசிந்துருக தொடங்கியது...!!!

கருவானத்தையும்,
காற்றையும் கிழித்துக்கொண்டு
மழைத்துளிகள்
வந்துகொண்டிருந்தது...!
விண்வெளியின் வழிகளில்...

மழைத்துளிகள்
மகிழ்ச்சி பயணம் செய்துகொண்டிருந்தது...!
மண்ணை நோக்கி...

காற்றின் இரைச்சலுக்கிடையிலும்
சில்லென்ற மழைத்துளி,
சிரிக்கும் சத்தம்
சிலுசிலுவென கேட்டது...!

மேகத்தை பிரிந்த
பிரிவின் வருத்தம்,
இன்று ஏனோ
இந்த மழைத்துளிகளுக்கு
சிறிதளவும் இல்லை...!

மழைத்துளியின்
மகிழ்ச்சியின் ரகசியம் - என்
மனதிற்கு ஏனோ புரியவில்லை...!

மறைந்திருந்து நோட்டமிட்டேன் நான்...!

பூமியை அடைந்ததும் ஏனோ
புதிய கவலையின் சுவடுகள்...!
மழைத்துளிகளின் முகத்தில்...

சாலையோர மழைத்துளிகளில்
இப்போது எஞ்சியிருப்பது,
ஏமாற்றத்தின் கவலைகள் மட்டுமே...

சாலையில் விழுந்த
மழைத்துளிகளின்,
முந்தைய மகிழ்ச்சிக்கும்,
இப்போதைய வருத்தத்திற்குமான
காரணம் புரிந்தது எனக்கு...!

ஆம்...!
மழைத்துளிகள்
ஏமாற்றமடைந்தது உண்மையே...!!

அந்த சாலையில்
என்னவள்
நடந்துபோய்க்கொண்டிருந்தாள்...!
கையில் குடையோடு...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

7 comments:

  1. எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிச்சிட்டீங்க. பவம்தான் மழை :). அடுத்தமுறை குடை இல்லாம போக சொல்லுங்க “உங்களவளை” :D
    கவிதை வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. இப்படிக்கு அனீஷ் ஜெ..... இல, முதன் முதலாக வித்தியாசமான.. “தன்னவவை” நினைக்காத கவிதை ஒன்று எழுதி புதுப் புரட்சியைக் கிளப்பிட்டார்.... என நினைத்துக்கொண்டே படிச்சுட்டு வந்தேனா..... முடிவில “அங்க”தான் வந்து நிற்குது.....

    மழைத்துளியின் ஏமாற்றம், உங்களுக்கு மகிழ்வைத் தந்திருக்குமென எங்களுக்கு நன்றாகத் தெரியுது:)))).

    ReplyDelete
  3. ஏனோ தெரியாது, உங்கள் இப்பூ, எனக்கு ஓபின் ஆக சிரமப்படுது எப்பவுமே.... பலதடவை போராடிய பின்னரே வெல்கிறேன்...

    ReplyDelete
  4. @Gayathri: குடை இல்லாம போனா, கோடையின் கடும் வெயிலிலும் மழை வரலாம்...! அதனால் எப்பவும் குடை கையில் இருக்கிறதுதான் நல்லது...! :))

    பாரட்டுக்கு ரொம்ப நன்றி காயத்ரி...

    ReplyDelete
  5. @athira: ரொம்ப நன்றி...!

    ஹ்ம்ம்ம்... காதலை தவிர்த்து மழை பின்னணியில் ஒரு கவிதை எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்... ஆனால் கவிதை கடைசில அங்கேயே வந்து நிக்குது :)

    எனது வலைப்பூவை IE பிரவுசரின் மூலம் ஓபன் செய்தால் இதுபோன்ற பிரச்சனை வர வாய்ப்புள்ளது....! எனது வலைப்பூவிற்கு MOZILLA FIREFOX பிரவுசரை நான் பரிந்துரைக்கிறேன்...!

    ReplyDelete
  6. hmmmmm pavam mazhai tuligal

    ReplyDelete
  7. @anishka nathan: ஓ அப்படியா? :) வருகைக்கு ரொம்ப நன்றி...!

    ReplyDelete