16 Apr 2011

ஒரு துளி புன்னகை - சிறு துளி மவுனம்


அருகில்தான்
அமர்ந்திருக்கிறாய் நீ...!

ஆனாலும் நமக்குள்
நிசப்தத்தின் இடைவளிகள்...!

என் பார்வைகளுக்கு
புன்னைகையை பதிலாக்கி
இன்னும் மவுனத்தாலேயே
புதிர் போடுகிறாய்...!

உன் வெட்க பார்வைகளும்
நம் இடைவெளிகளால்
விடை தெரியாத
கேள்விகளாகிறது...!

உன் வெட்கங்களுக்கு
வேலியிட்டு,
உன் மவுனத்தை - நீ
துடைத்தெறிவது எப்போது...?

உன் மவுனத்தை உடைக்கும்
முயற்சிகளில் நான்...!

பதிலை எதிர்பார்க்கும்
என் கேள்விகள்...!
விமர்சனங்களை எதிர்பார்த்து
ஒரு குட்டி கவிதை...!
எல்லாவற்றிற்கும்
பதிலாய் - உன்
வெட்க புன்னைகை மட்டுமே...

உன்
மவுனம் கலைக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறேன் நான்...

குட்டி நிலவுகளை
ஒட்டி வைத்ததுபோல்
இரு கண்கள்...!

களவெடுத்து வானவில்லில்
கறுப்பு வண்ணமிட்டதுபோல்
இரு புருவங்கள்...!

தங்க கிண்ணங்கள் இரண்டு,
உன் அங்கத்தில்
இரு கன்னங்களாய்...

தேன் கூட்டில்
மவுன பூட்டுகளாய்
உன் உதடுகள்...!

உன் மவுனம் கலைக்கும்
முயற்சிகளில்
உன்னை நான்
ரசிக்கவும் தவறவில்லை...!

என் பார்வைகள்
உன்னை உரச,
உன் தாவணி கோபுரத்தில்
தடுக்கி விழுந்த
என் கண்களை - நீ
தண்டிப்பது எப்போது...?

இன்னும்
மவுனத்தாலே
பேசிக்கொண்டிருக்கிறாய் நீ...

உயிர் மெய்கள்
உன் உள் நாக்கிலே
உயிர்விட
நானோ
செத்துப்பிழைக்கிறேன்...!

உன் சிறு துளி மவுனம்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்ல துடிக்க,
இன்னும் எனக்கு
மெல்ல மெல்ல
உயிர் தந்துகொண்டிருக்கிறது...!
உன் ஒரு துளி புன்னகை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

7 comments:

  1. :)))))....good discription........

    ReplyDelete
  2. வழமைபோல கவிதை கலக்கல்.

    கண் காது மூக்கெல்லாம் வர்ணித்தவிதம் சூப்பர்.

    இரு குட்டி நிலவோ கண்கள்...?:)

    ReplyDelete
  3. @anishka nathan: ஹ்ம்ம்ம் ரொம்ப நன்றி !!

    ReplyDelete
  4. @athira: ரொம்ப நன்றி !!
    இங்கே நான் காது மூக்கு எல்லாம் வர்ணிக்கவே இல்லையே... ஐயோ ஐயோ...!!
    ஹ்ம்ம்ம்ம் கண் தான் ஸ்பெஷல்...! அதான் அது குட்டி நிலவாயிடிச்சு...! :)

    ReplyDelete
  5. @athira: ரொம்ப நன்றி !!
    இங்கே நான் காது மூக்கு எல்லாம் வர்ணிக்கவே இல்லையே... ஐயோ ஐயோ...!!
    ஹ்ம்ம்ம்ம் கண் தான் ஸ்பெஷல்...! அதான் அது குட்டி நிலவாயிடிச்சு...! :)

    ReplyDelete
  6. Nalla Varnikireengaley Anish...
    Kalakureenga...!

    ReplyDelete
  7. @Kaavya: ஓஓ அப்படியா? ;) :p கருத்துக்கு ரொம்ப நன்றி...!!! :)

    ReplyDelete