பூமியெங்கும் நிசப்தம்...!
பூகோளத்தின் எல்லையெங்கும்,
பூத்திருந்தது நட்சத்திர பூக்கள்...!!
இன்று ஏனோ
இன்னும் அதிகமாய்,
இரவு இருண்டிருந்தது...!
அந்த மொட்டை மாடியில்,
கொட்டும் பனியில்,
காத்திருந்தேன் நான்...!
அவளுக்காய்...
காத்திருந்து
கால் வலித்தது...!
அவள் இல்லாத
அந்த தனிமையின் நிசப்தத்தை,
என் மனம் ஏனோ விரும்பவில்லை...!
வழக்கமாய் என்னை காண
வந்து போகிறவளை,
இன்று மட்டும்
இன்னும் காணவில்லை...!
கண்கள் பார்த்து,
கவிதை பேசி
என் இரவுகளில்
துணையிருப்பவள்,
இன்னும் வரவில்லை இன்று...
பூகோளத்தின் எல்லையெங்கும்,
பூத்திருந்தது நட்சத்திர பூக்கள்...!!
இன்று ஏனோ
இன்னும் அதிகமாய்,
இரவு இருண்டிருந்தது...!
அந்த மொட்டை மாடியில்,
கொட்டும் பனியில்,
காத்திருந்தேன் நான்...!
அவளுக்காய்...
காத்திருந்து
கால் வலித்தது...!
அவள் இல்லாத
அந்த தனிமையின் நிசப்தத்தை,
என் மனம் ஏனோ விரும்பவில்லை...!
வழக்கமாய் என்னை காண
வந்து போகிறவளை,
இன்று மட்டும்
இன்னும் காணவில்லை...!
கண்கள் பார்த்து,
கவிதை பேசி
என் இரவுகளில்
துணையிருப்பவள்,
இன்னும் வரவில்லை இன்று...
பாதி உடல் மறைத்து
நேற்று என்னை
பரிதவைக்க வைத்தவள்,
மீதி உடலையும் இன்று
மறைத்தது ஏனோ...?
எதிர்பார்த்து காத்து நின்ற என்னை
ஏமாற்றப்பார்க்கிறாள் அவள்...!
நினைத்தபோதே
நிலைதடுமாறியது மனது...!!
அவள் மேல் எனக்கு
கோபம் வர,
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழிமேல்
எனக்கு தூக்கமும் வந்தது...!
அவள் என்னை
ஏமாற்றியதாய் எண்ணி
தூங்கச் சென்றேன் நான்...!
இன்று,
அமாவாசை என்பதை
அறியாமல்...
----அனீஷ் ஜெ...
ஏமாற்றப்பார்க்கிறாள் அவள்...!
நினைத்தபோதே
நிலைதடுமாறியது மனது...!!
அவள் மேல் எனக்கு
கோபம் வர,
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழிமேல்
எனக்கு தூக்கமும் வந்தது...!
அவள் என்னை
ஏமாற்றியதாய் எண்ணி
தூங்கச் சென்றேன் நான்...!
இன்று,
அமாவாசை என்பதை
அறியாமல்...
----அனீஷ் ஜெ...
ஓஓ.... நிலவையோ சொன்னீங்க?:S.
ReplyDeleteவித்தியாசமான ஒரு கற்பனை.... வழமைபோல கலக்கல் கவி.
konjam kovathai controll pannunga.. kovathile manushan ellam maradiduvanga enna pannaranga kuda teriyadu apparam varutham pattu prayojanam elle....:)
ReplyDeleteகோபமோ? ஆருக்கு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)):T
ReplyDelete@athira : அதே அதே... நிலவேதான்... :)
ReplyDeleteஹ்ம்ம்ம் கோபம் எல்லாருக்கும்தான் வருது... உங்களுக்கு கூட வருதுனு நினைக்கிறேன்... கர்ர்ர்ர்ர்ர் சொல்றீங்க..? :U:U:U:U:U
கருத்துக்கு ரொம்ப நன்றி... :)
@anishka nathan : அய்யய்யோ அட்வைஸா??? :R:R:R:R:R சரி சரி இனிமேலாவது ஒழுங்க வர சொல்லுங்க... :Y அட நிலாவைதான்.... =))=))
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி... :)
கடைசியில்தான் கவிதையே புரிந்தது. சூப்பர் அனீஷ் :X
ReplyDelete@Monika : ரொம்ப நன்றிங்க மோனிகா ! :)
ReplyDeletevery nice Kavithai... Keep rocking Anish...!
ReplyDelete@Janu : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி !! :)
ReplyDeletesuperb...no words to say
ReplyDelete@Anonymous :( : கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
ReplyDeleteஉங்கள் பெயரை நீங்க குறிப்பிட்டிருக்கலாம்...! :Q
ஹ்ம்ம்ம் மீண்டும் வருக...! :T
பெண்ணை மலர் என்றார் நிலவென்றார் ஆதலால்
ReplyDeleteஅந்த நிலவுக்காய் காத்திருந்து இறுதியில் அவளுக்கும்
இன்று ஓய்வென்று (அமாவாசை )உறங்கிவிட்டீர்களோ?...அருமையான கவிதைவரிகள் வாழ்த்துக்கள் சகோ பின் தொடர்கின்றேன் .
கருத்துரைக்க மிக்க நன்றி பகிர்வுக்கு ....
@அம்பாளடியாள்: வருகைக்கும், கருத்துக்கு, பிந்தொடர்வதற்க்கும் மிக்க நன்றி...! மீண்டும் வருக... :)
ReplyDelete