11 Jul 2011

சிறு மழை ! ஒரு குடை !!


அது ஒரு
மழைக்கால
மாலை நேரம்...!

முருகன் கோயிலுக்கும்,
மூன்றாவது தெருவிலிருக்கும்
என் வீட்டிற்கும் இடையேயான
குறுகலான சாலையில் நான்...!

இல்லம் செல்ல - எனக்கு
இன்னும் ஒரு
இருபது நிமிடங்கள்
நடக்க வேண்டியிருக்கும்...!

இடியோ இம்சை கொடுக்க,
மின்னல் கண்கள் திறக்க,
மேகம் மெதுவாய்
மழையாய் அழ ஆரம்பித்தது...!

மழையில் நனைய - என்
மனது விரும்பவில்லை...!

ஆங்காங்கே தேடினேன்...!
ஒதுங்குவதற்கு
ஒற்றை இடம் கூட
கண்ணில் படவில்லை...!

சாலையில் மனிதர்களெல்லாம்
நனைந்துகொண்டே
நடந்து கொண்டிருக்க,
அவள் மட்டும்
கையில் குடையுடன்...

அவள் அருகில் சென்ற நான்
குடையில் கொஞ்சம்
இடம் கேட்டேன்...!

தயங்கியபடியே
தஞ்சம் தந்தாள் அவள்...!

நன்றி சொல்லியபடியே,
மழையிலிருந்து
தலையை மட்டும்
தற்காத்துக்கொள்ள முயற்சித்தேன்...!

சிறிய குடை...!
பெரிய இடைவெளி...!
இப்பொழுது இருவரும்
குடையின் இருபுறமுமாய்
நனைந்துகொண்டிருந்தோம்...!

அவளை அதற்குமுன்
எங்கேயும் நான்
கண்டதாய் ஞாபகமில்லை...!
அறிமுகமின்மை அவளுக்கு
அசவுகரியமாயிருக்கலாம்...!

நீங்கள் என்னால்
நனைய வேண்டாம் என சொல்லி,
நழுவி செல்ல முயன்ற என்னை
பரவாயில்லை என கூறி - குடையிலே
பத்திரப்படுத்திக் கொண்டாள் அவள்...!

இடைவெளி இப்பொழுது
குறைவது போல் இருந்தது...!

ஐந்து நிமிடம்
நடந்திருப்போம்...!
அந்த ஒற்றை சாலை
இப்பொழுது
இரண்டாய் பிரிந்தது...!

அவள் அந்தபக்கம்,
நான் இந்த பக்கம் என
இருவரும் பிரிய,
அவளுக்கு இன்னொருமுறை
நன்றி சொல்லிக்கொண்டு
மறுபடியும் மழையில்
நடக்கத்தொடங்கினேன் நான்...!

வீடு வந்து சேர்ந்தேன் நான்...!

மழை நின்றுவிட்டது...!
மாதங்கள் உருண்டோடிவிட்டது...!
அந்த சாலையில் - நான்
அவ்வப்போது நடக்கும்போதெல்லாம்,
அவளை தேட,
என் கண்கள் மறப்பதில்லை...!

அதன்பிறகு
அவளை நான்
எங்கேயும் பார்க்கவில்லை...!
எங்கிருக்கிறாள் என்பதுகூட
தெரியவில்லை...!

ஆனாலும்,
மழைக்காலங்களில் - எனக்கு
ஞாபக்கப்படுத்துகிறாள் அவள்...!
மறக்காமல் நான் 
குடையெடுத்து
செல்ல வேண்டுமென்பதை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

9 comments:

  1. இதுவும் உங்க சோகமான லவ் கவிதையோ என்று நினைத்தேன் :P நல்லவேளையா அப்படியேதும் இல்லை ;) கவிதை மழை நனையவைத்து ரசிக்க வைக்கிறது :C

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி மோனிகா :)

    ReplyDelete
  3. aval thirumbi kidaital enna pannuvinga?????? ;)

    ReplyDelete
  4. @anishka nathan : திரும்ப கிடைத்தால் குடை எடுத்திட்டு போக வேணாமேனு பார்த்தேன்...! அவ தான் குடை பிடிப்பாளே... :A:A:A:A:A
    கருத்துக்கு நன்றி... :)

    ReplyDelete
  5. Hi Anish... unga karpanai super, kavithayum suuuuper... keela irunthu 22nd linela oru spelling mistake irukku, avaluku bathila avluku nu iruku... mudinja correct paannirunga... valakkam pola Kalakureenga...!
    :C :X :C

    ReplyDelete
  6. @Kaavya : இதெல்லாம் எப்படி உங்க கண்ணுல படுது? :((
    கரெக்ட்டா கண்டுபிடிச்சு, எங்கே இருக்குனு சொன்னதுக்குக்கும், உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  7. Unga kavithai varigala urugi urugi padikirathunaala than ithellam kannula paduthunu nenaikiren...
    Ella commentskum reply panrathuku romba romba thanks Anish...!

    ReplyDelete
  8. @Kaavya : கவிதைகளை வாசித்து கமெண்ட்ஸ் கொடுக்குறதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்...! ரொம்ப நன்றி...!!! :)

    ReplyDelete
  9. இதுவும்
    மாலைநேரம் தான்-ஆனால்
    மழைக்காலம் அல்ல,
    இருப்பினும்
    உம் வார்த்தைகள்-என்னுள்
    தூவிக்கொண்டிருக்க,
    முடிவில்
    மகிழ்ச்சி என்னும்-வெள்ளம்
    பெருக்கெடுத்தோடியது...
    நல்லப் படைப்பை
    படித்தோமென்றெண்ணி.

    நன்றி&வாழ்த்துக்கள்

    ReplyDelete