அவள் வீட்டின்
அழகிய பூந்தோட்டத்தில்,
அவள்...
அவள் கையில் பூத்திருந்த
அந்த பூக்கூடை - அவள்
பூப்பறிக்க வந்திருப்பதை சொல்லியது...!
தோட்டம் முழுக்க
பூத்துக்கிடந்தது பூக்கள்...!
ஆனால் எந்த பூக்களும்,
அவள் உதடுகளில்
மொட்டு விட்டிருந்த
புன்னகை பூவைப்போல்
அழகில்லை...!!
பூக்களுக்கு வலிக்காமலே
பூக்களின்
உயிர் பறித்துக்கொண்டிருந்தாள் அவள்...!
அங்கிருந்தவைகளில் ஒரு பூ
அவள் பெயர் சொல்லி அழைத்தது...!
திரும்பிப்பார்த்த அவளிடம்
சிரித்துக்கொண்டே கேட்டது...!
நலமா என்று...
நீயா பேசுகிறாய் என்று - அந்த
நீல நிற பூவை
ஆச்சரியமாய் கேட்டாள் அவள்...!
ஆம் என்ற பூவிடம்
அவள் திருப்பிக்கேட்டாள்...!
பூக்கள் பேசுவதில்லையே என்று...
அழகானவர்களிடம் மட்டும்
நாங்கள் எங்கள்
மவுனங்களை உடைத்துவிட்டு
பேசிக்கொள்வோம் என்றது பூ...!
புன்னகைத்தாள் அவள்...!
பூவோ அவளிடம்
நீ தான் இவ்வுலகின் பேரழகி என்றது...!
நீண்ட யோசனைக்கு பின் - அவளோ
நீ பொய் சொல்கிறாய் பூவே என்றாள்...!
வார்த்தைகளில் பொய்தடவி,
வரிவரியாய் உன் அழகை விமர்சிக்க
நானொன்றும் கவிஞனில்லை என்றது பூ...!
இருவருக்குமிடையில்
இப்பொழுது நிசப்தம்...!
என்னை பறித்துவிடு என்றது பூ...!
நான் பறித்தால் - நீ
மரித்துப்போய் விடுவாய் என்றாள் அவள்...!!
படபடப்புடன் பூ சொன்னது
அப்படியென்றால்
இன்றென்னை பறித்துவிடாதே என்று...!
பரிதாபத்துடன்
பறிப்பதை தவிர்த்தாள்...!
அவள் அந்த பூவை...
அடுத்த பூவின்
அருகில் சென்றாள் அவள்...!
அதுவும் அவளிடம்
நலமா என்றது...!
பின்பு அவளை
அழகென்றது...!
அன்று
அவள் தோட்டத்தில்
எல்லா பூக்களும் பேச,
அவளோ வெறுங்கையோடு
வீடு திரும்பினாள்...!
பிழைத்துக்கொண்டதாய்
குதூகலித்துக்கொண்டன பூக்கள்...!
மறுநாள் விடிந்ததும்
பூந்தோட்டத்தை பார்த்தாள் அவள்...!
செடிகளும் பூக்களும் இல்லாமல்
பூந்தோட்டம் வெறுமையாய் கிடந்தது...!
ஆனால் நேற்றிரவு
அவள் கண்ட கனவில் மட்டும்
இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது...!
அன்றென்னை
அவள் சந்தித்த போது
அவள் கனவில் வந்த பூக்கள்
அவளிடம்
பேசிக்கொண்டதாய் சொன்னாள்...!
நான் சொன்னேன்
உன்னிடம் கனவில்தான் பூக்கள் பேசும்...!
ஆனால் என்னிடமோ
நிஜத்திலே ஒரு பூ பேசுகிறது என்று...
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
காதை தொட கழுத்தை சுற்றிய கதைதான் இது :B:B
ReplyDeleteபுதுசுபுதுச யோசிக்கிறீங்க :Y கவிதை ஒகே :C பாராட்டுக்கள்
Anish sema Kavithai...
ReplyDeleteRomba nalla Iruku...
Kalakureenga...! :) :) :)
:)
ReplyDeleteகவிக்கா கலக்கலாக ஒரு கவிதை. ஒவ்வொரு வரியும் அழகாக, ஒரு காதல் கதைபோல இருக்கு.
ReplyDeleteகடைசி வரிகள் கலக்கல்.
அதுசரி ஆரோடு இப்படிச் சண்டை போடுறீங்க?:))).
@Monika : அது கழுத்தை சுற்றி அல்ல, தலையை சுற்றி காதை தொடுவது என நினைக்கிறேன் ;) ஹ்ம்ம்ம் நான் எழுதிய கவிதைகளில், ரொம்ப மொக்கையான கவிதைகளில் இதுவும் ஒன்று என நான் நினைச்சேன்... நீங்க ஓகே சொல்லிருக்கீங்க, அப்போ ஓகே தான்...
ReplyDeleteஅதுசரி நான் புதுசு புதுசா யோசிச்சா நான் தானே தலையை பிச்சுக்கணும்.. நீங்க ஏன் பிச்சுக்குறீங்க..? =)) =))
கருத்துக்கு ரொம்ப நன்றி !! :)
@Kaavya : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி காவ்யா... அடிக்கடி வாங்கோ :)
ReplyDelete@anishka nathan : வந்தமைக்கும், சிரித்தமைக்கும் ரொம்ப நன்றி !! ;) ;) :)
ReplyDelete@athira : சண்டையாயாயாயா? நானா??? :U:U யாரோடு எப்போ போட்டேன்...? :Y:Y
ReplyDeleteஎனக்குதான் சண்டை போடவே தெரியாதே.. :S
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி !! :)
பூ பேசுகின்ற கற்பனை super
ReplyDeleteஅந்த படமும் super
by
லிவினா
@Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDelete