யாருமற்ற தனிமையில்...
மவுனத்திற்கும்,
மழைத்துளி
மண்ணில் விழும்
சத்தத்திற்கும்,
இடைப்பட்டதொரு
இன்னிசையாய் உன் குரல்...!
தூரத்து நிலவில்
தூரிகையால் வரைந்த
ஓவியமாய்
உன் அழகு...!
தோழியானதாலென்னவோ
இவை இரண்டையும்,
இதுவரை
உன்னிடம் சொல்ல
தோன்றவில்லை எனக்கு...!
இப்போதெல்லாம் - நான்
எதை சொன்னாலும் - சில
வெட்கத் துண்டுகள்
உன் முகத்தில்
ஒட்டிக்கொள்கின்றன...!
என்னிடம்
அதிகம் பேசவே
அடிக்கடி
திணறுகிறாய் நீ...!
நட்பின் எல்லையை
நாகரீகத்தோடு
சிலசமயம்
தாண்டுகிறாய்...!
கண்டுகொள்ளாதவனாய் நான்...!!
எனக்கு
பிடித்தவைகளையெல்லாம்,
நீயும்
பிடிக்கும் என்று சொல்வதில்
எனக்கொன்றும்
ஆச்சரியம் தோன்றவில்லை...!
என்னைப் பற்றி
எனக்கு தெரியாதவைகளையே
மரத்தடி ஜோசியனாய்
சலிப்பே இல்லாமல் சொல்கிறாய்...!
கல்லூரி தோழி முதல்
கணக்கு டீச்சர் வரை,
புதிய சினிமா முதல் - உன்
புது ஆடை வரை,
மழையில் நனைந்தது முதல்
மதிய உணவு வரை
எதைப்பற்றியும்
என்னிடம் நீ
சொல்லத் தவறியதில்லை...!
உன்
எண்ணப்பறவைகள்
எங்கோ
சிறகடித்து பறப்பதை
என் வானத்தில் உணர்கிறேன்...!
நட்பின் எல்லைகளை
சில்லுசில்லாய் உடைத்துவிட்டு,
சொல்லாத வார்த்தையும்,
பொல்லாத காதலுமாய்
யாருமற்ற தனிமையில்
எனக்காய் - நீ
காத்துக்கொண்டிருக்கிறாய்...!
இங்கே...
அதே யாருமற்ற தனிமையில்
என் இதய அறைகளில்
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்...!
என்றாவது ஒருநாள்
என்னிடம் நீ
கேட்கப்போகும்
கேள்விக்கான விடையை...
----அனீஷ் ஜெ...
விடை கிடைச்சதா இல்லையா? :Y கவிதையும் படமும் அழகு :C
ReplyDeleteசாரி... விடை கிடைக்கல... வடை போச்சு... ;)
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி :)
வணக்கம் அனிஷ்..
ReplyDeleteநல்ல தமிழில்
அழகு வார்த்தைகள்
கொண்டு ஆடம்பரமில்லா
ஒரு காதல் கவிதையை வடித்த உங்களுக்கு
வாழ்த்துக்கள் //
விடை கெடச்சுதா .///
அழகு வாழ்த்துகள்
Delete@அரசன் : அட நீங்களுமா தல? :A இது யாரோ யாரையோ நினைச்சு சொன்னது.. நான் கவிதையா எழுதிருக்கேன்... ;)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி தல.. :)
hmmmm...:))) v gud intresting.....
ReplyDelete@anishka nathan : ரொம்பபபபபபபபபபபபப நன்றி !! :) :X
ReplyDeleteNeenga thaan vidai thedura maadri theriuthu...
ReplyDeleteSolla than maatreenga Anish...
Kavithai romba super...
Kalakureenga...!
@Kaavya: அதெப்படி கரெக்ட்டா தப்பா சொல்றீங்க... =)) =)) கருத்துக்கு ரொம்ப நன்றி...!!:)
ReplyDeleteNalla kavithai vaalthukal.
ReplyDeleteVetha. Elangathilakam
@kovaikkavi: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDelete