சின்னதாய் மழைத்தூறல்...!
சிந்தி விழும் மழைத்துளியோ
சிரிப்பதுபோல் இருந்தது...!!
சிறு இரைச்சல்களுக்கிடையில்
சிட்டுக்குருவியின் குரல்...!!!
வடக்கு வானத்தில்
வானவில் மெதுவாய்
வளர்ந்திருந்தது...!
காற்று மோதியதாய்
கதை பேசியது மரங்கள்...!
குடையில்லை எனக்கு...!
சட்டைக்கு மேலே
பொட்டு வைத்தது மழைத்துளி...!!
தூறல் மழை இப்பொழுது
வானத்திலிருந்து வந்திறங்கிய
ஆறாய் உருமாறியது...!
மழையில் நனைந்தேன் நான்...!
ஏதோ நினைவுகள்
என் அடிநெஞ்சை நனைத்தது...!
இதயத்தின் ஓசை
இப்பொழுது
இடியையும் மிஞ்சியது...!
ரசிக்க தெரிந்த கண்கள்
ரகசியமாய் அழுதன...!
மழை துளிகளுக்கிடயில் மோதி,
மரித்துப்போனது கண்ணீர்துளிகள்...!!
முதுகுக்குப்பின்னால்
மெதுவாய் ஒரு
காலடி சத்தம்...!
கண்களை திருப்பினேன் நான்...!
யாரும் என்னை
பின்தொடரவில்லை...!
ஒற்றைகுடையில் - என்னோடு
ஒன்றாய் நடந்த,
அவளின்
நினைவுகளை தவிர...
----அனீஷ் ஜெ...
சிந்தி விழும் மழைத்துளியோ
சிரிப்பதுபோல் இருந்தது...!!
சிறு இரைச்சல்களுக்கிடையில்
சிட்டுக்குருவியின் குரல்...!!!
வடக்கு வானத்தில்
வானவில் மெதுவாய்
வளர்ந்திருந்தது...!
காற்று மோதியதாய்
கதை பேசியது மரங்கள்...!
குடையில்லை எனக்கு...!
சட்டைக்கு மேலே
பொட்டு வைத்தது மழைத்துளி...!!
தூறல் மழை இப்பொழுது
வானத்திலிருந்து வந்திறங்கிய
ஆறாய் உருமாறியது...!
மழையில் நனைந்தேன் நான்...!
ஏதோ நினைவுகள்
என் அடிநெஞ்சை நனைத்தது...!
இதயத்தின் ஓசை
இப்பொழுது
இடியையும் மிஞ்சியது...!
ரசிக்க தெரிந்த கண்கள்
ரகசியமாய் அழுதன...!
மழை துளிகளுக்கிடயில் மோதி,
மரித்துப்போனது கண்ணீர்துளிகள்...!!
முதுகுக்குப்பின்னால்
மெதுவாய் ஒரு
காலடி சத்தம்...!
கண்களை திருப்பினேன் நான்...!
யாரும் என்னை
பின்தொடரவில்லை...!
ஒற்றைகுடையில் - என்னோடு
ஒன்றாய் நடந்த,
அவளின்
நினைவுகளை தவிர...
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
Enna Anish ivlo sogama eluthirukeenga :((... but very nice Anish... romba touchinga irukku...
ReplyDeleteKalakureenga...!
:)
அழகாய் அற்புதமாய் ஒரு தரமான படைப்பு ..
ReplyDeleteவாழ்த்துக்கள் அனீஸ்
eppodum ninavu dana ?? practically onnum kidayada?? azhudute erukingale yen ?? oru sirikara madari kavidai ezhudungal ani avargale :))))))))
ReplyDelete@Kaavya: அச்சச்சோ இதுக்கெல்லாம் அழாதீங்க...! :Y:Y கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@அரசன்: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி தல...! :)
ReplyDelete@anishka nathan: பிரக்ட்டிக்கலி நிறையவே இருக்கே...! எல்லாம் எழுத இடம் போதாது ;);) அதுசரி யாரு சிரிக்குற மாதிரி கவிதை எழுதணும்... ஊரே சிரிக்குற மாதிரிதானே... :B:B நான் எழுதுறதுல பாதிக்கு மேலே கவிதை அப்படிதான் இருக்கு... :A:A :R:R
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
ஒற்றை குடையில் அவள் நினைவுகளுடன் தனியே - படு குழியில் தள்ளும் வலி அந்த காதல் வலி கவிதையில் - கலக்கல் பாஸ்
ReplyDeleteவருகிறேன் பாஸ் :R
ReplyDelete@மாய உலகம்: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி பாஸ்...! :)
ReplyDeleteமழைத்தூற்ல்கள் மனதை நனைத்துவிட்டன :) நன்றாக இருக்கு :C
ReplyDelete@Monika: ரொம்ப நன்றி...! :)
ReplyDelete