கருவறையிலிருந்து ஒரு கடிதம்...
சுற்றும் முற்றும் பார்க்க,
இங்கே
சுதந்திரமில்லை...!
முதுகை திருப்பவோ,
முகம் நிமிரவோ
முடியவில்லை எனக்கு...!
நிசப்தமான - இந்த
நிகழ்காலத்தில்
நிழல் கூட
எனக்கு சொந்தமில்லை...!
என் உறுப்புகளெல்லாம்
சுறுசுறுப்பாய்
இயங்கதொடங்கிவிட்டது இப்போது...!
இன்னும் சிலகாலம்தான்,
இந்த இருட்டறையிலிருந்து
இடம் மாறிவிடுவேன் நான்...!
நினைத்தபோதே - என்னை
நனைத்து சென்றது
மகிழ்ச்சியின் அலை...!
மகிழ்ச்சியில் ஒருமுறை
உரக்க சிரித்தேன்...!
ஐயோ...!!
நான் சிரித்தது,
எனக்கே கேட்கவில்லை...!!
பல்லில்லாத வாயிலிருந்து,
சொல்லொன்றும் வரவில்லை...!
இமைகளை ஒருமுறை
இருக்கி அடைத்தேன்...!
இருட்டறையில் இதிலொன்றும்
வித்தியாசம் தெரியவில்லை எனக்கு...!!
கரங்களை மெதுவாய்
தட்டிக்கொண்டேன்...!
நான் எட்டி உதைப்பதாய்
வெளியே யாரோ பேசிக்கொண்டனர்...!!
கண்கள் முழுக்க கனவையும்,
இதயம் முழுக்க அன்பையும்
சுமந்துகொண்டு - நான்
காத்திருக்கிறேன்...!
என்னை சுமக்கும்
என் தாயின் முகம் காண...
----அனீஷ் ஜெ...
nice poem
ReplyDeleteenda veli ulagatai paakarta vida anda ammavoda secret room liye eruka nan virupadaren.....epadi oru idea vechu kavidai ezhudiyatuku mikka nandr ani avargale
ReplyDeleteஅருமையான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeletearumai anish
ReplyDelete@ரேவா: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@anishka nathan: உங்க கருத்து நியாயமானதுதான்...! ஹ்ம்ம்ம் நீங்க தேங்ஸ் சொல்ல கூடாது... நான் தான் சொல்லணும்... :) கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@இமா: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@shamilipal: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :) மீண்டும் வாங்க.. :)
ReplyDeletevery nice Anish... Oru thaai than kulanthaiya pathi yosichutu irupaa, but oru kulanthai ammava nenachutu iruka maadri eluthirukurathu romba differnta irukku... and 19th line la oru small spelling mistake... pls correct it...
ReplyDeleteKalakureenga...!
:C :C :C
@Kaavya: அதெப்படிங்க எழுத்துப்பிழை உங்க கண்ணுக்கு மட்டும் தெரியுது? :Y
ReplyDeleteஎழுத்துப்பிழை சரிசெய்யபட்டுவிட்டது!! :T :T எழுத்துப்பிழையை சுட்டிகாட்டியமைக்கும், விமர்சனத்திற்கும் ரொம்ப நன்றி...! :)
Nice imagination
ReplyDeleteகவிக்கா.... கவிதை வெளிவந்தவுடனேயே ஓடிவந்தேன், ஆனால் சொமெண்ட்ஸ் பொக்ஸ் ஐக் காணாததால் போய் விட்டேன்.
ReplyDeleteசூப்பராக எழுதியிருக்கிறீங்க, இத்தனை நாள் எழுதியதைவிட இதுதான் ரொப் ஆகப் படுது எனக்கு. இமாகூட வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறாவே.
கவிதை நன்றாக இருகிறது :C:C:C
ReplyDelete@Shama T: ரொம்ப நன்றி !! :)
ReplyDelete@athira: கமெண்ட் பாக்ஸ் காணாமல் போயிருந்ததை அடுத்தநாள் தான் தெரிந்துகொண்டேன்...!
ReplyDeleteஹ்ம்ம்ம் வித்யாசமா எழுத முயற்சி பண்ணினேன்...! :T
வந்தமைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
@Monika: ரொம்ப நன்றி !! :)
ReplyDeleteகவிதையின் கருவும், கருத்தும் அழகிய சிற்பி. [தாய்] அழகிய கவிதைக்கு நன்றி!!!
ReplyDelete@Sowmiya: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDeleteஅழகிய சிந்தனை அத்தனை வரிகளும் அருமை!....
ReplyDeleteஉங்கள் கற்பனைக் கவிதைக்கு வாழ்த்துக்கள்
நன்றி பகிர்வுக்கு ......
@அம்பாளடியாள்: ரொம்ப நன்றி...! :)
ReplyDeletenallaa irukku anish j...
ReplyDeletevazththukkal
@Anonymous: வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க... ;)
ReplyDelete