24 Aug 2011

ஆச்சரியமானவன் நீ...


அன்று நான் பிறந்து
கண் திறந்தது முதல்,
இன்று வரை
என்னை உன் நெஞ்சுக்குள்
புதைத்து வைத்திருப்பவன் நீ...!

உன் கைவிரல் பிடித்துதான்
நான் நடக்க கற்றுக்கொண்டேன்...!
இன்று வரை
அப்படியே தொடர்கிறது...!
அந்த பயணம்...

எல்லாம் தெரிந்த
அற்புத மனிதனாய்,
என் கண்களுக்கு தெரிந்த
முதல் மனிதன் நீ...

என் மீது நீ வைத்திருக்கும்
அன்புக்கும் அக்கறைக்கும்
அடையாளமாகிவிடுகின்றன...!
உன் கண்டிப்புகளும்
சில தண்டிப்புகளும்...

உன் வார்த்தைகளை விட
உன் மவுனத்திற்கே
நான் அதிகம் பயப்படுகிறேன்...!

இருட்டிலே நடந்தால்
ஒளிகாட்டவும்,
இதுதான் சரியென்று
வழிகாட்டவும்,
உனக்கு நிகராய்
இங்கு எவருமில்லை...!

நீ எனக்கு
கற்றுகொடுத்தவைகளும்,
நீ எனக்காய்
விட்டுக்கொடுத்தவைகளும் ஏராளம்...!

அம்மா என்பவள்
பத்துமாதம் கருவில் சுமக்க,
மிச்ச காலம் முழுவதும்
இதயத்திலும்
தோள்களிலுமாய் சுமக்கும்,
அப்பா என்னும்
ஆச்சரியமானவன் நீ...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

13 comments:

  1. romba nalla irukku Anish... Appava pathi romba arumaya eluthirukeenga...and the picture is very nice too... Title ah paatha udaney nenachen, appava pathi than kavithainu...
    Kalakureenga...!
    :C :C :C :C :C

    ReplyDelete
  2. kavithai nalla eruku aana enda khaalatula appa voda amma ku dan responsibilities niraya ...amma dan thol enaa mudugula sumanda kuzhadingala pathukaranga:)) amma rendu duties pannaranga adunala amma ku i salute

    ReplyDelete
  3. Your theme is fantastic. Keep it up

    ReplyDelete
  4. @Kaavya: கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
    பின்குறிப்பு:- நேயர்விருப்பம் நிறைவேற்றப்பட்டது... :)

    ReplyDelete
  5. @anishka nathan: அம்மா குழந்தையை சுமக்குறாங்க... ஆனா அப்பாவோ அந்த குழந்தை, அம்மா, ஏன் அந்த மொத்த குடும்பத்தையும் சுமக்குறார்... நான் இந்த கவிதைல இரண்டு பேரையும் compare பண்ணல... அப்பா எப்படி இருப்பார்,னு என் அனுபவத்தில இருந்து எழுதிருக்கேன்.. அவ்வளவுதான்...!
    கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  6. @K.Anparasu: வருகைக்கும், கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
    மீண்டும் வருக...!! :)

    ReplyDelete
  7. Mikka nandri Anish... Neyar virupathai niraivetriyatharkaga...

    ReplyDelete
  8. :(((((((((((((((((((((((((((((((((((((((((((

    ReplyDelete
  9. @anishka nathan: ஏன் இவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சோகம்?:Q:Q

    ReplyDelete
  10. இருட்டிலே நடந்தால் ஒளி காட்டவும் இதுதான் சரியென்று வழிகாட்டவும்/இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கிறது

    ReplyDelete
  11. பொதுவாக அப்பா கவிதை அதிகம் யாரும் எழுதுவதில்லை. அதிலும் நீங்க நன்றாக எழுதிருக்குறீங்க. :) :C

    ReplyDelete
  12. @Monika: அந்த வரிகள் எனக்கும் பிடித்திருக்கிறது...! வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)

    ReplyDelete