7 Oct 2011

திருடிய பொழுதுகள் !


ஒற்றையடி பாதையில்
உனக்காய் நான் காத்துநின்ற
ஓராயிரம் நிமிடங்கள்...!

உன்னிடம் நான்
காதல் தேடிய காலங்களில்
நான் தொலைத்த,
காதல் காலங்கள்...!

நீ கிடைப்பாய் என்பதற்காக
உன்னுடன் நான் செலவிட்ட
என் நாட்கள்...!

சின்ன சண்டைகளின் முடிவில்
உன் மவுனத்தை உடைப்பதற்கு
நான் போராடிய தருணங்கள்...!

உன் குரல் கேட்பதற்காகவே
தூக்கத்தை இழந்த
பல நூறு இரவுகள்...!

உன்னை நினைப்பதிலே
நான் தொலைத்துக்கொண்டிருக்கும்
என் ஆயுளின் நொடிகள்...!

என்னிடம் திருடிய
இதயத்தை நீ
கசக்கி பிழிந்து
திருப்பித் தந்துவிட்டாய்...!
எப்பொழுது நீ
திருப்பிதர போகிறாய்...?

நீ என்னிடம் திருடிய
என் பொழுதுகளை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

11 comments:

  1. என்னாச்சுங்க தல..
    கவிதை அருமை ..

    விடுங்க தல எங்க இருந்தாலும் தூக்கி வந்து தாலி கட்டுங்க ..

    ReplyDelete
  2. கஷ்டம் தான்! திருடிய பொழுதுகள் திருடியவை தான்! தொடருங்கள்..வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  3. @அரசன்:தூக்கலாம்னுதான் நானும் நினைச்சேன் தல... ஆனால் கொஞ்சம் வெயிட் அதான் விட்டுட்டேன்...! =))
    ரொம்ப நன்றி தல... :)

    ReplyDelete
  4. @kovaikkavi: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ! :)

    ReplyDelete
  5. vazththukkal ,,,,kavithai arumai,,,ungal manam virubiyavar ungalodu ser iraivanai vaendugiraen.................

    kavalai vidunga anishj...evvalavu wait ah irunthalum grine vachchi thookidalaam ....
    dont worry..........be happy ,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  6. @Anonymous: எவ்வளவு வெயிட்டா இருந்தாலும்னா? உங்க அளவுக்கு வெயிட்டா இருந்தா கூடவா??? :U
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி... :)

    ReplyDelete
  7. taramudiyala na enna panna mudium ada antic dan

    ReplyDelete
  8. @anishka nathan: புரியல.... :Y:Y

    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...

    ReplyDelete
  9. ஒரு காதலுக்காக ஒரு இளைஜன்

    ஓராயிரம் நாட்கள்

    காதல் காலங்கள்

    பல நாட்கள்

    பல இரவுகள்..ilandhu vittan

    இதை விட அவனுடைய ஆயுளையே இழந்து

    விட்டான்..ஐயோ பாவம் ..by livina

    ReplyDelete
  10. @Anonymous: சரி நீங்க அழாதீங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. கவிதைக் காதலன்April 18, 2017 6:46 pm

    கவிதையை பகிர முடியவில்லை தோழா

    ReplyDelete