14 Oct 2011

காதல் முத்தம் !


உதடுகள் பேசிக்கொள்ளும்
ஊமை மொழி இது...!

”இச்” என்ற
இதன் சத்தத்தில்,
“நச்” என்று
நசுங்கி சிரிக்கும் மனது...!

எச்சில்கள் கூட
தீர்த்தமாவது இதில் மட்டுமே...!

இதை பரிமாறினால்தான்
காதல் கூட வயதுக்குவரும்...!

இதன் ஈரம் பட்டால்
சகாரா இதயத்திலும்
சட்டென மழை பெய்யும்...!

எல்லை மீறல்களுக்கு
ஆரம்ப புள்ளியும்,
செல்ல சண்டைகளுக்கு
முற்றுப்புள்ளியும் இதுதான்...!

உதடுகள் போடும்
கோலம் இது...!
உயிர்வரை தொடும்
ஜாலம் இது...!

காதலின் முகவரியாய்,
காமத்தின் முதல் வரியாய்,
எததனையோ உதடுகளில்
சத்தமில்லாமல்
பேசிக்கொண்டிருக்கிறது...!
இந்த காதல் முத்தம்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

5 comments:

  1. nalla irukku anish,,,
    vaazththukkal ...

    ReplyDelete
  2. @Anonymous: ரொம்ப ரொம்ப நன்றி ! :)
    உங்க பெயரை சொல்லிருக்கலாம்.. :)

    ReplyDelete
  3. azhgana feelings ani

    ReplyDelete
  4. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...

    ReplyDelete