11 Oct 2011

முழுநிலா வானம் !


ஒரு மழைக்கால
பவுர்ணமி இரவு...!

என் பழைய டையரியில்
முதுமையாகிக் கொண்டிருக்கும்
என்றோ எழுதிய
என் கவிதைகளை
புரட்டிபார்த்தவாறே நான்...!

கவிதை காகிதம் முழுக்க
அவள் மட்டுமே
வார்த்தைகளாகியிருந்தாள்...!

அவளை நிலவெனச்சொல்லி,
அவளுக்காய் நான் எழுதிய
முதல் கவிதை...!
முதல் வரியை படித்தபோதே
மூச்சு முட்டியது எனக்கு...!

அவளை சுமக்கும் மனது
மரண வலியில் துடிப்பதாய் உணர்வு...!
கண்ணீர்துளி விழுந்து
காகித எழுத்துக்கள்
கரைந்துவிடும் போலிருந்தது...!

டயரியை மடித்துவைத்துவிட்டு
திண்ணைக்கு வந்தேன்...!

மழை சொட்டுசொட்டாய்
பூமியை தொட்டுக்கொண்டிருந்தது...!

வானத்தை பார்த்தேன்...!

நிலைவை சுமந்த வானமோ,
மின்னல் பட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்துகொண்டிருந்தது...!
அவள் என்னும்
நிலவை சுமக்கும்
என் மனசை போல...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

8 comments:

  1. எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் அவள் தான் என்னும். . .எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் முதலில் நினைவிற்கு வருவது அவள் முகம் தான் அருமை சகா. . .

    ReplyDelete
  2. @வைரை சதிஷ்: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ! :)

    ReplyDelete
  3. @பிரணவன்: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா! :)

    ReplyDelete
  4. @sreeni: ரொம்ப நன்றி ! :)

    ReplyDelete
  5. kavithai miga arumai ..... vazththukkal

    boss ungalukae konjam overa thaerinju irukkup pola unga aalai nilavoda varnikkirathu ....

    intha kodumaiyai porukkatha unga idhayam kanneerai sindthi irukku ,,,,,,,,,,,eppudi ,,,

    hahahhaaaaaaaaa

    ReplyDelete
  6. @Anonymous: சரி அதுக்காக நீங்க அழாதீங்க.. ஃப்ரீயா விடுங்க ;)
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி... :)

    ReplyDelete