
உன் ஓரப்பார்வையில்தான்
ஆரம்பித்தது....!
உனக்கான என் காதல்...
என் இமைகள் வழியே
உள்ளிறங்கி
என் இதயம் வரை
உள் நுழைந்தாய் நீ...!
உனக்காகவே எதையும் செய்யவும்
அதற்காகவே எதையும் எதிர்க்கவும்
கற்றுக்கொடுத்திருக்கிறது காதல்...!
உன்னுடன் வாழலாம் என
உருவாகிய என் காதல்
உனக்காகவே சாகவும் - என்னை
உருமாற்றியிருக்கிறது...!
மனதில் விதைத்த
காதல் பயிர்
முளைக்குமென்று தெரியும்...!
ஆனால்
காதலென்னும் இந்த பயிர்
விளையுமா என்று
முளையிலே கூட தெரிவதில்லை...!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
nalla kavithai..
ReplyDeleteஅது தெரிந்தால் சாகவும் என்கிற எண்ணம் உருவாக்கி இருக்காதே...
ReplyDeleteவாழ்க்கை வாழ்வதற்கே... வாழ வைப்பதற்கே...
பத்திரமாக வளருங்கள் .. அப்ப அப்ப சில உரங்களையிட்டு வளருங்க தல நிச்சயம் விளையும் இந்த அழகிய பயிர் ...
ReplyDeleteஅருமையான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகவிதை நன்று...வாழ்த்துக்கள்...
ReplyDeletehmm super kavithai bright future iruku polachukuva
ReplyDelete