பட்டாம்பூச்சிகள் பறப்பதை நான்
பார்த்திருக்கிறேன்...!
இன்று
பட்டாம்பூச்சியொன்று
துப்பட்டா சிறகுகளை
காற்றிலசைத்து
நடந்து செல்கிறது...!
தேன்களையும் பூக்களையும்
தேடியலைய
தேவையில்லை உனக்கு...!
தேன் தடவிய - உன்
பூமுக இதழ்கள் இருக்கும் வரை...
புழுக்கள்தான்
பட்டாம்பூச்சியாக மாறுமென்பதை
புத்தகமொன்றில் படித்திருக்கிறேன்...!
பூவொன்று
பட்டாம்பூச்சியாகுமென்பது
புரிந்தது எனக்கு உன்னால்...
அருகில் அமர்கிறாய்...!
தொட நினைத்தால்
தொலைவில் செல்கிறாய்...!!
பட்டாம்பூச்சிக்கு நீ
சற்றும் சளைத்தவளில்லை...!!!
இதயகிளைகள் உனக்காய்
இன்னொருமுறை முளைக்கிறது...!
வந்து அமர்ந்துவிடு
பட்டாம்பூச்சி பெண்ணே...
----அனீஷ் ஜெ...
pattampuchiya pola kavithai azhagu
ReplyDeleteஅருமை படமும் அது தந்த கவிதையும்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Super
ReplyDelete