
ஐந்து மணிக்கே
வெளிச்சம் பிரசவிக்கும்
சில காலைகள்...!
ஏழு மணிக்கும்
இருளின் மிச்சம் சுமக்கும்
சில காலைகள்...!
அண்டார்டிக்கா குளிரை
தேகத்தில் போர்த்தும்
சில காலைகள்...!
சூரியனின் அக்னியை
சூடாய் தெளிக்கும்
சில காலைகள்...!
அதிகாலை நேரத்தில்
அம்மாவின் குரல் கேட்கும்
சில காலைகள்...!
அசந்து தூக்கும் வேளை
அலாரம் கத்தும்
சில காலைகள்...!
எல்லா காலைகளும்
ஏதோ ஒரு விதத்தில்
மாறுபட்டே விடிகிறது...!
நான் மட்டும்
மாற்றமேதுமில்லாமல் எழுகிறேன்...!
உன் நினைவுகளோடு...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
என்னுள்ளும் பல காலை
ReplyDeleteநினைவுகளை க்ளறிவிட்டுப் போகிறது
தங்கள் அற்புதமான கவிதை
முடித்த விதம் வெகு வெகு அருமை
பகிர்வுக்கும்தொடரவும்ம் ந்ல்வாழ்த்துக்கள்
awsom lines.... sama... keep it up... tq ..
ReplyDeleteஅடடா அடடா.. என்னா ஒரு கற்பனை... ஆனாலும் எங்கின சுத்தினாலும் முடிவில் அங்கினதானே வந்து நிக்குது:) ஹா ஹா ஹா...
ReplyDelete