கண்ணாடி பார்த்தே புன்னகைக்க பழகு...! உன் விரல் நுனிகளை நீயே முத்தமிடு...! உன் தோள்களில் சாய்ந்துகொள்ள உன் முகத்திற்க்கு கற்றுக்கொடு...! கைகளிரண்டால் உன் கன்னம் தடவு...! உன் தேகத்தை நீயே கட்டியணை...! ஆறுதல் தேடினால் அவமானங்களே மிஞ்சும்...! உன் தனிமைகளின் உண்மையான நண்பன் நீ மட்டுமே... ----அனீஷ் ஜெ...
படபடக்கும் எந்தன் நெஞ்சில் நீ தொடுக்கும் பார்வை அம்பு உயிரில் குத்தி கிழியுதே...! காதல் மெல்ல வழியுதே...!! பருகும் தேனீர் கோப்பைக்குள்ளே தெரியும் உந்தன் முகம் காலை தென்றலாய் வருடுதே...! கனவின் மீதியாய் தொடருதே...!! நகராத மேகக்கூட்டம் மழை கொட்ட நேரம் தேடி சிறு மின்னனாய் வெடிக்குதே...! உன்னை காண என்னைபோல் துடிக்குதே...!! காற்றின் வழியே காதில் நுழையும் இசையில் வழியும் கவிதை வரிகள் நீயும் நானும் ஒன்று என்று சொல்லுதே...! நீயில்லாத தனிமைகளை கொல்லுதே...!! போர்வை மறைத்த தேகக்கூடும் விளக்கணைத்த இரவு காடும் உன் நினைவுகளில் முடியுதே...! உனை காணவேண்டி விடியுதே...!! ----அனீஷ் ஜெ...
முதல் சந்திப்பே முகம் பார்க்காமல் செல்பேசிகளின் செவிவழியேதான்...! நீண்ட நாட்களின் நீண்டதொரு தயக்கத்திற்க்குபின் உன் முகம் பார்க்கும் ஆசையில் உன்னிடம் புகைப்படமொன்று கேட்டேன்...! புன்னகையில் மெல்லிசை கலந்து புரியாதா சிரிப்பொன்று சிரித்தாய்...! அந்த சிரிப்பில் எனக்கு தெரிந்தது...!! அழகாய் உன் ஆயிரம் முகங்கள்... ----அனீஷ் ஜெ...
காதலெனும் கதவுகளை திறந்து காத்துக்கிடக்கிறேன் நான்...! நட்பெனும் நம்பிக்கையை சுமந்தே நீ நுழைகிறாய் என்னுள்...! வெறும் நட்பெனும் - உன் வெள்ளை உடையில் - என் வன்காதல் துளிகளை வண்ணமாய் அள்ளி வீசுவது - உன் விழிகளில் விழவில்லை...! என் பெரும் மவுனத்திற்கும், ஏமாந்த முகத்திற்கும் காரணம் காதலென்பதை கண்டிபிடிக்க தவறுகிறாய் நீ...! உன்னிடம் சண்டையிடுவது பிடிக்குமென்கிறாய்...! எனக்கோ உன்னை முத்தமிட பிடித்திருக்கிறது...!! என் மனமோ உனக்கின்னும் பிடிபடவில்லை...!!! என் மீதான உன் நட்பில் என் காதலை கொஞ்சம் கலக்க என்ன வழியென்பது எனக்கின்னும் தெரியவில்லை...! சொல்லாத என் பொல்லாத காதல் சொர்க்கத்திலும் சேராதென்கிறார்கள்...! நான் சொல்லாமலிருப்பதே நட்பு நரகத்தில்கூட பிரியாமலிருக்கத்தான்... ----அனீஷ் ஜெ... Written By : Anish J. Requested By : Thiruvasugi.
மண்ணாய் உலர்ந்த மனதில் விதையாய் விழுகிறது...! உன் நினவுகள்...! நீர் விடாமலே வேர் விட்டு மெல்ல முளைக்க முயற்சிக்கிறது...! களையெனெ நினைத்து களைய நினைத்தாலும், இரும்பில் பட்ட காந்தமாய் இறுகி பற்றியே இழுக்கிறது...! முளை கிள்ளியே முறிக்க முயற்சித்தாலும், கிளை தள்ளி மீண்டும் கிடுகிடுவென தளிர்க்கிறது...! அரும்பாக ஆரம்பித்து மொட்டாக இதழ் விட்டு மலராக மலர்கிறது அது...! உணர்ச்சியென்னும் பட்டாம்பூச்சிகள் உட்கார்ந்து மலரில் கொஞ்சம் இதழ்களை பிரித்து இரைதேன் தேடுகிறது...! பட்டாம்பூச்சிகளே...! பறந்துசென்றுவிடுங்கள்...!! இந்த மலர்களில் சுரக்கும் தேன்களில் இனிப்பு சுவையில்லை...! கடலின் உப்பு சுவைக்கும் கண்ணீரின் சுவை மட்டுமே...!! ----அனீஷ் ஜெ... Written By : Anish J. Requested By : Meethu.
வெள்ளை மேகங்களை வெறுங்கையால் பிளந்தேன்...! வீட்டு முற்றத்தின் நிலத்தடியில் விலை மதிப்பில்லா புதையல் எடுத்தேன்...! தொலைபேசியில் கோபமூட்டியவனை தொலைவில் இருந்தே அடித்தேன்...! இன்று கண்ட அழகி ஒருத்தியை இரவில் ஒருமுறை புணர்ந்தேன்...! இரு நிமிட நேரத்தில் இருபது தேசங்கள் பறந்தேன்...! சச்சினின் சாதனைகளனைத்தையும் சத்தமில்லாமல் உடைத்தேன்...! தவறுகளுக்கு இங்கு தண்டனைகளில்லை...! கைகட்டி நிற்கும் கட்டுப்பாடுகளில்லை...! எத்தனை சுதந்திரமானவைகள்...! எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் என் கற்பனைகள்... ----அனீஷ் ஜெ...
வெயிலுக்கும் நீ குடைபிடித்தே நடக்கிறாய்...! இல்லையென்றால் வெளியில் நீ வரும்போதெல்லாம் உன் முகம் கண்டே உருகி சூரியன் மழையாகியிருக்கும்...!! வெட்டவெளியில் விழும் வெயில் நேர உன் நிழலில்தான், சூரியன் சிலசமயம் வந்தமர்ந்து சூட்டை தணித்துச்செல்கிறது...! வெயிலில் நீ நடக்கையில் - உன் நெற்றியில் உருண்டு வெறும் பூமியில் விழுகிறது வியர்வை துளியொன்று...! பெருமழை பெய்ததைப்போல் குதூகலிக்கிறது பூமி...!! வெயிலில் கொடுஞ்சூட்டை - நீ விசிறியால் வீசி தணிக்கிறாய்...! உருவாகும் காற்றோ உன் தேகம் தொடும்போதெல்லாம் சூடாகிப்போகிறது...! உச்சி வெயில் சூரியனை உன் வெறும் கண்களால் அன்றொருநாள் பார்த்தாய்...! தாங்கமுடியாதா ஒளியால் தன் விழி மூடிக்கொண்டது...!! சூரியன்... ----அனீஷ் ஜெ...
ஐந்து மணிக்கே வெளிச்சம் பிரசவிக்கும் சில காலைகள்...! ஏழு மணிக்கும் இருளின் மிச்சம் சுமக்கும் சில காலைகள்...! அண்டார்டிக்கா குளிரை தேகத்தில் போர்த்தும் சில காலைகள்...! சூரியனின் அக்னியை சூடாய் தெளிக்கும் சில காலைகள்...! அதிகாலை நேரத்தில் அம்மாவின் குரல் கேட்கும் சில காலைகள்...! அசந்து தூக்கும் வேளை அலாரம் கத்தும் சில காலைகள்...! எல்லா காலைகளும் ஏதோ ஒரு விதத்தில் மாறுபட்டே விடிகிறது...! நான் மட்டும் மாற்றமேதுமில்லாமல் எழுகிறேன்...! உன் நினைவுகளோடு... ----அனீஷ் ஜெ...
கண் பட்டவை கை தொட்டவையென பார்த்தவை அனைத்தையும் பறித்துக்கொண்டேன்...! நிராகரிக்க மனமில்லாமல் நிரம்பி வழியும்வரை சேர்த்து மெல்ல சேகரித்தேன்...! அவையனைத்தையும் அள்ளியெடுத்து நான் கசக்கி பிழிந்து கலந்தெடுத்தேன்...! பெரும் மதிப்பு கொண்ட பெட்டியொன்றில் உருவாகிய கலவையை ஊற்றி வைத்தேன்...! அப்பெட்டியை நான் அப்படியே தூக்கி எவருக்கும் தெரியாத ஏதோ ஓரிடத்தில் புதைத்தேன்...! தினமும் நான் அதை திறந்து பார்த்தே கலவையின் நிலமையை கண்காணிகத்தேன்...! ஆண்டுகள் பல கடக்கிறது....! அழிந்து போகுமென நான் அவதானித்தது இங்கே தவறாய் போவதற்கான தடம் தெரிகிறது....! கெட்டுப்போகவும் கரைந்து தீரவும் செய்யாமல் விடியும் நாளொன்றுக்கும் வீரியமே கூடுகிறது...! இன்னும் நான் இதயப்பெட்டிக்குள் ஊற்றி உயிரில் புதைத்திருக்கிறேன்...! உன் நினைவென்னும் மதுவை... ----அனீஷ் ஜெ...
ஹாய்...! நிமிடங்கள் சிலதாய் நீ வரவேண்டி காத்திருந்து எதிரில் வந்த உன்னிடம் ஏதேதோ பேசுவதற்காய் மன்னிக்கவும்...! ஒரேயொரு கேள்வியின் ஒருவார்த்தை பதிலொன்றை ஒருமுறை சொல்லிவிடு நீ...! அழகான பெண்ணொருத்தியின் ஐந்து விரல்களையும், இறுக்கி பிடித்துக்கொண்டு இரவில் நடப்பதாய் கனவொன்று கண்டேன்...! நல்ல பொண்ணாதான் நாங்க உனக்கு கட்டிவைப்போமென அம்மா ஒருமுறை சொன்னதாய் ஞாபகம்...! உனக்காக பிறந்தவள் எங்க இருக்காளோ இப்ப என தோழியும் சிரித்தாள்...! உன்னை கல்யாணம் செய்து காலம்பூரா கஷ்டப்படபோறவ யாரோவென நண்பர்களின் கூட்டமும் கிண்டலடித்தது...! இந்த வருடம் காதல் கைகூடுமென கலாண்டரின் ஆண்டு பலனும் சத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறது....! பதில் சொல்லிவிட்டு போ...! அத்தனைபேரும் இப்படி சொல்லும் அவள்தானா நீ... ----அனீஷ் ஜெ...