வீடொன்று இருக்கிறது...! வருபவர்களில் சிலருக்கே வாசல்கடந்தும் அனுமதி...! உள்ளிருப்பவர்களோடு பாகுபாடுமில்லை பகையுமில்லை...! வீட்டை நேசிக்கும் சிலரோ கூட்டி பெருக்கி வண்ணம் தீட்டுகிறார்கள்...! வந்தவர்களில் பலரோ தரையை உடைத்து சுவரை முறித்து ஆனந்தமாகிறார்கள்...! நேசித்துக்கொண்டிருந்தவர்களும் பலகாலம் செல்ல பராமரிப்பதை விட்டுவிட்டு பாழாக்க தொடங்குகிறார்கள்...! கடுங்கோபம் கொண்ட வீட்டின் சொந்தக்காரனோ அத்தனைபேரையும் அங்கிருந்தே துரத்துகிறான்...! பாழடைந்துபோன அந்த வீடு இப்போதும் அங்கேயே இருக்கிறது...! என் நெஞ்ச்சு கூட்டிற்குள் வீடொன்று இருக்கிறது...! ----அனீஷ் ஜெ...
வெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்...! சிறிதாய் படபடக்கிறது கைகள்...! சிகரெட்டொன்றை பற்றவைக்கவேண்டும் போலிருக்கிறது...! நெற்றியின் வெற்றிடத்தை இருகை விரல்களும் இறுக தடவிக்கொண்டிருக்கிறது...! தலையை கோதியபடியே தனியே பேச முயற்சிக்கிறேன்...! இன்றிரவு தூக்கம் வரப்போவதில்லை...! இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் இயல்பாய் இருக்க போவதில்லை...!! இன்றோடு போகட்டும் இன்னொரு நாள் என் கண்ணில்பட்டுவிடாதே...! ஏனென்றால் என்றோ நீ என்னை மறந்து தொலைதிருக்கலாம்...! நான் உன்னை தொலைக்க மறந்துவிட்டேன்...!! ----அனீஷ் ஜெ...
முடித்து விடலாமென நினைக்கும் முடிவுறா என் வாழ்க்கையை மீண்டும் வாழச்சொல்லி - என்னை மீட்டுச் செல்கிறது....! என் ஏதோ ஒரு நம்பிக்கை... இல்லை யாரோ ஒருவரின் வேண்டுதல்...
சில சிரிப்புகளின் முடிவில், பல சோகங்களின் வடிவில், சில பாடல்களின் வரியில், பல பயணங்களின் வழியில், நிறமில்லா நீர்த்துளிகள் விழிகளில் வந்து நிறைகிறது...! என்றோ நான் தொலைத்த என் நண்பனின் நினைவுகளாய்...
கவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal
இத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.