கத்தியே சொன்னாலும் கால் பகுதி மட்டுமே கபாலம் கடந்து நுழைகிறது...! அரைகுறையாய் கேட்டு அதில்பாதி காற்றோடு விட்டு அரை அரக்கனாய் மாறுகிறோம்...! பிடிக்காத ஒன்றை நீ செய்து தொலைக்கிறாய்...! பிடித்ததை கூட நான் மறந்து முழிக்கிறேன்...!! நேரம் ஒதுக்கவில்லை நேரம் கிடைக்கவில்லையென ஒதுக்கி கிடைக்கும் நேரங்களில் ஒரு உலகப்போரே வெடிக்கிறது...! திட்டியும் கொட்டியும் திகட்டி சலிக்கிறோம் நாம்...! போதும் இந்த பொல்லாத காதலென்று வாரம் ஒருமுறையேனும் வசனம் பேசுகிறோம்...! ஆனாலும் நம்மை ஆயுளெல்லாம் காதலிக்கச்செய்கிறது...! சண்டைகளை முடித்துவைக்க - உன் ஒரு புன்னகையோ, ஒருதுளி கண்ணீரோ, சில அணைத்தல்களோ, சிறு முகம் திருப்பலோ என இதிலொன்று போதுமென்கிற உன் புரிதல்... ----அனீஷ் ஜெ...
சாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...! நடு இரவில் நிலவை போலே சுடும் வெயிலில் குளிரை போலே வெறும் நிலத்தில் பூவை போலே பெரும் கடலில் தீவை போலே நீங்கா நிழலாய் நீயும் வந்தாயே...! கொட்டி தீர்க்கும் காதல் கொண்டாய்...! தொட்டு தூங்க தோள்கள் தந்தாய்...! முட்டிமோதும் முத்தத்தாலே முழுதாய் கொன்றாயே... விழிகள் பார்த்து உருகி நின்றேன்...! மொழிகள் சேர்த்து பருகி தின்றேன்...! உன் வழிகள் தோறும் உடன் வந்து செல்வேனே... காதல் தந்தாய்...! காத்திருந்தாய்...!! ஒற்றை இதயமாய் ஒட்டி கலந்தாய்...!!! உயிரில் நுழைந்து - என் உலகம் ஆனாயே... ----அனீஷ் ஜெ...
வீடொன்று இருக்கிறது...! வருபவர்களில் சிலருக்கே வாசல்கடந்தும் அனுமதி...! உள்ளிருப்பவர்களோடு பாகுபாடுமில்லை பகையுமில்லை...! வீட்டை நேசிக்கும் சிலரோ கூட்டி பெருக்கி வண்ணம் தீட்டுகிறார்கள்...! வந்தவர்களில் பலரோ தரையை உடைத்து சுவரை முறித்து ஆனந்தமாகிறார்கள்...! நேசித்துக்கொண்டிருந்தவர்களும் பலகாலம் செல்ல பராமரிப்பதை விட்டுவிட்டு பாழாக்க தொடங்குகிறார்கள்...! கடுங்கோபம் கொண்ட வீட்டின் சொந்தக்காரனோ அத்தனைபேரையும் அங்கிருந்தே துரத்துகிறான்...! பாழடைந்துபோன அந்த வீடு இப்போதும் அங்கேயே இருக்கிறது...! என் நெஞ்ச்சு கூட்டிற்குள் வீடொன்று இருக்கிறது...! ----அனீஷ் ஜெ...
வெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்...! சிறிதாய் படபடக்கிறது கைகள்...! சிகரெட்டொன்றை பற்றவைக்கவேண்டும் போலிருக்கிறது...! நெற்றியின் வெற்றிடத்தை இருகை விரல்களும் இறுக தடவிக்கொண்டிருக்கிறது...! தலையை கோதியபடியே தனியே பேச முயற்சிக்கிறேன்...! இன்றிரவு தூக்கம் வரப்போவதில்லை...! இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் இயல்பாய் இருக்க போவதில்லை...!! இன்றோடு போகட்டும் இன்னொரு நாள் என் கண்ணில்பட்டுவிடாதே...! ஏனென்றால் என்றோ நீ என்னை மறந்து தொலைதிருக்கலாம்...! நான் உன்னை தொலைக்க மறந்துவிட்டேன்...!! ----அனீஷ் ஜெ...
முடித்து விடலாமென நினைக்கும் முடிவுறா என் வாழ்க்கையை மீண்டும் வாழச்சொல்லி - என்னை மீட்டுச் செல்கிறது....! என் ஏதோ ஒரு நம்பிக்கை... இல்லை யாரோ ஒருவரின் வேண்டுதல்...
சில சிரிப்புகளின் முடிவில், பல சோகங்களின் வடிவில், சில பாடல்களின் வரியில், பல பயணங்களின் வழியில், நிறமில்லா நீர்த்துளிகள் விழிகளில் வந்து நிறைகிறது...! என்றோ நான் தொலைத்த என் நண்பனின் நினைவுகளாய்...
கவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal
இத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.